மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகாராஷ்டிரா மக்கள் முதுகில் குத்திவிட்டார் அஜித் பவார் - சஞ்சய் ராவத் காட்டம்

Google Oneindia Tamil News

Recommended Video

    In early morning twist | தேவேந்திர பட்னவீஸ் முதல்வரானார் !

    மும்பை: மகாராஷ்டிராவுக்கு அஜித் பவார் துரோகம் இழைத்துவிட்டார் என்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும் என்சிபி தலைவர் சரத்பவாரும் சந்திக்கவுள்ளதாக சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

    மகாராஷ்டிராவில் நேற்று வரை காங்கிரஸ்- என்சிபி- சிவசேனா கூட்டணி அமைத்து அதில் உத்தவ் தாக்கரே முதல்வராவார் என எதிர்பார்க்கப்பட்டது. சுழற்சி முறையில் முதல்வர் பதவி கேட்டு சமாதானம் அடைந்த பவார், உத்தவ் தாக்கரே தலைமையில் புதிய ஆட்சி மலரும் என நேற்றைய தினம் பேட்டி அளித்தார்.

    இந்த நிலையில் திடீர் திருப்பமாக பாஜக- என்சிபி கூட்டணி உருவானது. இதையடுத்து முதல்வராக தேவேந்திர பட்னவீஸும் துணை முதல்வராக அஜித் பவாரும் பதவியேற்றனர்.

     பட்னவீஸ் பதவியேற்பு.. ரகசியம் காத்த மகாராஷ்டிர ஆளுநர் மாளிகை.. நடந்தது என்ன.. விறு விறு தகவல்கள் பட்னவீஸ் பதவியேற்பு.. ரகசியம் காத்த மகாராஷ்டிர ஆளுநர் மாளிகை.. நடந்தது என்ன.. விறு விறு தகவல்கள்

    சரத்பவார்

    சரத்பவார்

    இவர்களுக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பாஜகவுடன் ஒரு போதும் கூட்டணி அமைக்க மாட்டோம் என சரத்பவார் கூறியதை மற்ற தலைவர்கள் நினைவு கூர்ந்தனர். மேலும் விவசாயிகள் நலனுக்காக மோடியை சந்தித்தாக கூறிய சரத்பவார் கூட்டணி குறித்தே மோடியுடன் பேசியதாகவும் சொல்லப்பட்டது.

    துணை முதல்வர்

    துணை முதல்வர்

    இந்த நிலையில் சரத்பவார் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் பாஜகவுடன் கூட்டணி தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முடிவல்ல. பாஜகவுடன் இணைந்து கூட்டணி அமைத்திருக்கும் அஜித் பவாரின் முடிவுக்கு ஆதரவு இல்லை. துணை முதல்வராக பதவியேற்றது அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவு என்றார்.

    சரத்பவார்

    சரத்பவார்

    இந்த நிலையில் அஜித் பவாருக்கு என்சிபியை சேர்ந்த 22 எம்எல்ஏக்களின் ஆதரவும் சில சிவசேனா எம்எல்ஏக்களின் ஆதரவும் இருப்பதாக தெரியவருகிறது. இதுகுறித்து சிவசேனாவின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் கூறுகையில், உத்தவ் தாக்கரேவும் சரத் பவாரும் இதுகுறித்து பேசி வருகின்றனர்.

    சஞ்சய் ராவத்

    சஞ்சய் ராவத்

    இந்த நிலையில் இன்று இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவர். அப்போது செய்தியாளர்களையும் சந்திக்க வாய்ப்புள்ளது. அஜித் பவாரும் அவருக்கு ஆதரவு தெரிவித்த எம்எல்ஏக்களும் சத்ரபதி சிவாஜியையும் மகாராஷ்டிரத்தையும் அவமதித்துவிட்டார்கள். அஜித் பவார் முதுகில் குத்திவிட்டார்.

    பழிக்கு பழி

    பழிக்கு பழி

    நேற்று வரை அஜித் பவார் எங்களுடன்தான் இருந்தார். அவரது நடவடிக்கைகள் சந்தேகத்தை எழுப்பின. பேச்சுவார்த்தையின் போது திடீரென எழுந்து சென்ற அவர் , சிறிது நேரத்தில் அவரை தொடர்பு கொண்ட போது அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவர் வழக்கறிஞரை பார்க்க சென்றதாக தெரிவிக்கப்பட்டது. ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் சரத்பவாருக்கு தொடர்பில்லை. தேர்தலுக்கு முன்பே எம்எல்ஏ பதவியை அஜித் பவார் ராஜினாமா செய்ததில் ஏதோ உள்நோக்கம் இருந்துள்ளதை இப்போது அறிகிறோம். அவர் சரத்பவாருக்கு துரோகம் இழைத்துவிட்டார் என்றார் சஞ்சய் ராவத்.

    சிறைச் சாலை

    சிறைச் சாலை

    மேலும் சிவசேனாவின் சஞ்சய் ராவத் கூறுகையில் மகாராஷ்டிராவில் நடந்த விஷயங்கள் ஏதும் சரத்பவாருக்கு தெரியாது. அஜித் பவார் இருக்க வேண்டிய இடம் ஆர்தூர் சாலை சிறையாகும். அவர் இப்போது துணை முதல்வராகிவிட்டார். நேற்று இரவு நடந்த சம்பவங்கள் அனைத்து கெடுதலானவை. நேற்று முதல் அஜித் பவார் எங்கள் கண்ணை பார்த்துக் கூட பேசவில்லை என்றார்.

    English summary
    Sanjay Raut,Shiv Sena says that Uddhav Thackeray ji and Sharad Pawar ji are in touch and will meet also today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X