மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேவேந்திர பட்னவீஸ் ஆட்சியில் எனது போன் ஒட்டு கேட்கப்பட்டது.. சஞ்சய் ராவத் பரபரப்பு தகவல்

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் காலத்திலிருந்து எனது போன் ஒட்டு கேட்கப்பட்டதாக பாஜக ஒருவரே என்னிடம் கூறினார் என சஞ்சய் ராவத் எம்பி பரபரப்பு புகாரை தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் முந்தைய பாஜக ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவர்களின் போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக குற்றம்சாட்டினார்.

Sanjay Raut says that his phone was tapped during Devendra Fadnavis period

குறிப்பாக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்த போது அந்த கட்சித் தலைவர்களின் போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக கூறிய அவர் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.

இதுகுறித்து சிவசேனா மூத்த தலைவரும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான தேவேந்திர பட்னவீஸ் ஆட்சியில் தனது போன் ஒட்டு கேட்கப்பட்டதாக பாஜக தலைவர் ஒருவரே என்னிடம் கூறியிருந்தார்.

முன்னாள் அதிமுக எம்பி பழனிச்சாமி கைது.. கோவையில் அதிகாலையில் பரபரப்புமுன்னாள் அதிமுக எம்பி பழனிச்சாமி கைது.. கோவையில் அதிகாலையில் பரபரப்பு

என் பேச்சை யாராவது கேட்க விரும்பினால் அதை நான் வரவேற்கிறேன் என நான் அவரிடம் கூறினேன். நான் பால்தாக்கரேவின் சீடனாவேன். நான் என்ன செய்தாலும் அதை வெளிப்படையாகவே செய்வேன்.

மகாராஷ்டிரத்தில் சிவசேனா தலைமையில் ஆட்சி அமைக்க முக்கிய பங்காற்றியவர் சரத்பவார். இதன் காரணமாக அவரது வீட்டுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டிருக்கலாம். அண்மையில் சோனியா காந்தி குடும்பத்திற்கு வழங்கப்பட்ட எஸ்பிஜி பாதுகாப்பு படையினரும் திரும்ப பெறப்பட்டுள்ளனர் என்றார் சஞ்சய் ராவத்.

English summary
Sanjay Raut says that his phone was tapped during Devendra Fadnavis period. This was revealed to im by a BJP activist.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X