மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வீட்டுக் கடன் வட்டி குறைப்பு.. மூத்த குடிமக்கள் டெபாசிட்களுக்கு வட்டி அதிகரிப்பு.. எஸ்பிஐ அசத்தல்

Google Oneindia Tamil News

மும்பை: இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தனது எம்.சி.எல்.ஆர் விகிதத்தை 15 அடிப்படை புள்ளிகள் குறைப்பதாக அறிவித்துள்ளது.

ஓராண்டுக்கான எம்.சி.எல்.ஆர் 2020 மே 10 முதல், நடைமுறைக்கு வரும். ஆண்டுக்கு 7.40 சதவீதத்திலிருந்து 7.25 சதவீதமாக எம்.சி.எல்.ஆர் விகிதம், குறைக்கப்படும். இது எஸ்பிஐ வங்கியின் தொடர்ச்சியான 12வது எம்.சி.எல்.ஆர் குறைப்பு ஆகும்.

SBI cuts MCLR and increased senior citizen interest rates

எம்.சி.எல்.ஆர் குறைப்புக்குப் பிறகு, தகுதிவாய்ந்த வீட்டுக் கடன் கணக்குகளின் (எம்.சி.எல்.ஆருடன் இணைக்கப்பட்டுள்ளது) 30 ஆண்டுகள் செலுத்தும் காலத்தைக் கொண்ட ரூ. 25 லட்சம் வீட்டுக் கடனுக்கான மாதாந்திர தவணைத் தொகை ரூ.255 வரை குறையும் என்றும், எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

உங்கள் வீட்டுக் கடன் எஸ்பிஐயின் எம்சிஎல்ஆர் விகிதத்துடன் இணைக்கப்பட்டிருந்தால், எம்சிஎல்ஆர் அடிப்படையிலான கடன்கள் பொதுவாக ஒரு வருட மீட்டு விதிமுறைகளைக் கொண்டிருப்பதால், விகித குறைப்பு, எனவே, உங்கள் ஈஎம்ஐக்களை உடனடியாகக் குறைக்காது.

இதேபோல மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி கிடைக்கும் வகையில் சிறப்பு டெபாசிட் திட்டத்தை பாரத ஸ்டேட் வங்கி அறிமுகப்படுத்தியது.

1962ல் இருந்த இந்தியா 2017லும் இருப்பதாக சீனா நினைத்துவிட வேண்டாம்... அருண் ஜெட்லி வார்னிங் 1962ல் இருந்த இந்தியா 2017லும் இருப்பதாக சீனா நினைத்துவிட வேண்டாம்... அருண் ஜெட்லி வார்னிங்

குறைந்து வரும் வட்டி விகித்திலிருந்து மூத்த குடிமக்களை பாதுகாக்கும் வகையில் 'எஸ்பிஐ வீகோ் டெபாசிட்' என்ற பெயரில் சிறப்பு டெபாசிட் திட்டத்தை அறிமுகம் செய்வதாக எஸ்பிஐ கூறியுள்ளது. இதன் மூலம் 5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலான மூத்த குடிமக்கள் டெபாசிட் திட்டங்களுக்கு கூடுதலாக 0.30 சதவீதம் வட்டி கிடைக்குமாம். இந்த திட்டம் செப்டம்பா் 30 வரை அமலில் இருக்கும்.

ஆனால், 3 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 0.20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. மே 12-ஆம் தேதியிலிருந்து இது நடைமுறைக்கு வரவுள்ளது.

English summary
India's biggest lender State Bank of India or SBI today announced a reduction in its MCLR or marginal cost of funds-based lending rate by 15 basis points across all tenors.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X