மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காங், என்சிபி, சிவசேனாவின் குறைந்தபட்ச செயல் திட்டம் தயார்- விரைவில் ஆட்சி அமைக்க உரிமை கோரும்!

Google Oneindia Tamil News

மும்பை: காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (என்சிபி), சிவசேனா ஆகிய கட்சிகள் இணைந்து செயல்படுவதற்கான குறைந்தபட்ச செயல் திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இம்மூன்று கட்சிகளும் ஆளுநர் கோஷ்யாரியை சந்தித்து விரைவில் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளன.

மகாராஷ்டிராவில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்காத சூழ்நிலையில் ஜனாதிபதி ஆட்சி தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தின.

Sena, NCP, Congress parties finalise common agenda

முதல் கட்டமாக மூன்று கட்சிகளுக்கும் பொதுவான குறைந்தபட்ச செயல் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. கடந்த இருநாட்களாக மூன்று கட்சிகளின் குழுக்களும் இது தொடர்பாக விவாதித்தன.

தற்போது இந்த கட்சிகளின் குறைந்தபட்ச செயல் திட்டம் தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த குறைந்தபட்ச செயல் திட்டத்துக்கு கட்சிகளின் தலைமைகள் ஒப்புதல் தர வேண்டும்.

Sena, NCP, Congress parties finalise common agenda

அமலாக்கப் பிரிவு வழக்கில் ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது நாளை டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவுஅமலாக்கப் பிரிவு வழக்கில் ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது நாளை டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

கட்சிகளின் தலைமைகள் ஒப்புதல் தந்த பின்னர் மூன்று கட்சிகளும் இணைந்து ஆளுநர் கோஷ்யாரியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரும். அப்போது தங்களது ஆதரவு எம்.எல்.ஏக்கள் பட்டியலும் ஆளுநரிடம் ஒப்படைக்கப்படும்.

English summary
Shiv Sena, NCP and Congress have finalised their common minimum programme.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X