மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வரலாறு காணாத உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. இன்போசிஸ், எச்.சி.எல் பங்குகள் ஏற்றம்

Google Oneindia Tamil News

மும்பை: மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் வெள்ளிக்கிழமை காலை வரலாறு காணாத உச்சமாக 47,026.02 புள்ளிகளை தொட்டது.

இன்போசிஸ், எச்.சி.எல் டெக், டி.சி.எஸ், நெஸ்லே இந்தியா மற்றும் பஜாஜ் ஆட்டோ ஆகியவை அதிக லாபத்தைப் பெற்றன. நேற்றைய பங்கு நேர முடிவில், சென்செக்ஸ் 223.88 புள்ளிகள் அல்லது 0.48 சதவீதம் அதிகரித்து 46,890.34 என்ற நிலையில் இருந்தது. இது சென்செக்ஸ்சின் புதிய உச்சமாகும்.

Sensex Crosses 47,000-mark for First Time Ever

தேசிய பங்குச் சந்தையான நிஃப்டியும் 58 புள்ளிகள் அல்லது 0.42 சதவீதம் உயர்ந்து 13,740.70 என்ற புதிய உச்சத்தை தொட்டு வர்த்தக நேரத்தை நிறைவுற்றது.

மிசஸ் பெக்டர்ஸ் உணவு நிறுவனம் சிறப்பு ஆரம்ப பொது சலுகை (ஐபிஓ) சந்தாவின் கடைசி நாளாக நேற்று நிர்ணயம் செய்திருந்தது. அன்று 197.34 முறை சந்தா பெற்றது அந்த நிறுவனம். நிறுவனமல்லாத முதலீட்டாளர்கள் பெக்டர்ஸில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டினர். 621 முறை சந்தா செலுத்தினர்.

சுங்கச்சாவடிகளுக்கு முற்றுப்புள்ளி.. ஜிபிஎஸ் முறைக்கு மாறப்போகும் மத்திய அரசு.. அதிரடி திட்டம்சுங்கச்சாவடிகளுக்கு முற்றுப்புள்ளி.. ஜிபிஎஸ் முறைக்கு மாறப்போகும் மத்திய அரசு.. அதிரடி திட்டம்

பர்கர் கிங், மெக்டொனால்டு, கே.எஃப்.சி, கார்ல்ஸ் ஜூனியர், பிஸ்ஸா ஹட் மற்றும் டொமினோஸ் பிஸ்ஸா போன்ற உணவகங்களுக்கு இந்தியாவில் மிகப்பெரிய பன் சப்ளையர் மிசஸ் பெக்டர்ஸ்தான்.

வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (எஃப்.பி.ஐ) நேற்று, நிகர அடிப்படையில் ரூ .2,355.25 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியதால் மூலதன சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தினர்.

English summary
Sensex opened on a high note on Friday as profit-booking emerged at fresh highs in early trade amid persistent foreign fund inflows.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X