மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்செக்ஸ் வரலாறு காணாத உச்சம்.. பட்டையை கிளப்பும் பங்குச் சந்தை

Google Oneindia Tamil News

மும்பை: சென்செக்ஸ் வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்வை சந்தித்து அசத்தியுள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில், 40,434.83 புள்ளிகளை எட்டியது சென்செக்ஸ்.

முந்தைய வர்த்தக நாள் முடிவை ஒப்பிட்டால், சென்செக்ஸ் கிட்டத்தட்ட 250 புள்ளிகள் உயர்ந்தது. வெளிநாட்டு நிதி வலுவான வருகை, கார்ப்பரேட் வரி குறைப்புக்குப் பிறகு இந்த பாசிட்டிவ் சமிக்ஞையை பங்குச் சந்தை தர ஆரம்பித்துள்ளது என்கிறார்கள், வர்த்தக துறை வல்லுநர்கள்.

Sensex hits life time high

அமெரிக்கா, சீனா ஒத்துழைப்பு, காரணமாகவும், உலகளாவிய சந்தைகளில் ஏற்றம் காணப்படுகிறது. காலை 9.27 மணிக்கு, சென்செக்ஸ் 216.40 புள்ளிகள் அல்லது 0.54 சதவீதம் அதிகரித்து 40,381.43 புள்ளிகளாக இருந்தது சென்செக்ஸ். பிறகு அதிகபட்சமாக 40,434.83 புள்ளிகளை எட்டியது.

நிஃப்டியும் 81.70 புள்ளிகள் அதிகரித்து 11,972.30 ஆக உயர்ந்தது. இது 52 வார உயர்வான 12,103.05லிருந்து சற்று குறைவாகும்.

அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாய் மதிப்பும், ஒரு மாத உயர்வான 70.55 ஆக உள்ளது.

மெட்டல் பங்குகள், டாடா ஸ்டீல் மற்றும் வேதாந்தா 4% க்கும் அதிகமாக உயர்வை சந்தித்தன. அமெரிக்க-சீனா வர்த்தக பேச்சுவார்த்தைகளின் மீதான நம்பிக்கையும் உலோகப் பங்குகளை உயர்த்தியுள்ளது.

English summary
The Indian equity market Sensex touched a fresh all time high of 40,434.83 during the early trade.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X