மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜகவின் கூட்டணிக்கான அழைப்பு விவகாரத்தை அஜித்பவாரிடம் நானே கொடுத்தேன்: சரத் பவார் ஒப்புதல்

Google Oneindia Tamil News

Recommended Video

    Maharashtra Floor Test Updates : சிவசேனா கூட்டணி அதிரடி.. 169 எம்எல்ஏக்கள் ஆதரவு !

    மும்பை: மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைப்பதற்காக பாஜக விடுத்த கூட்டணிக்கான அழைப்பு குறித்து ஆராயுமாறு அஜித்பவாரிடம் தாமே பொறுப்பை ஒப்படைத்ததாக சரத்பவார் கூறியுள்ளார்.

    மகாராஷ்டிராவில் சிவசேனா- காங்கிரஸ்- என்சிபி இணைந்து புதிய அரசு அமைந்துள்ளது. சுமார் 1 மாத காலமாக மகாராஷ்டிரா அரசியலில் நீடித்த பல குழப்பங்களுக்குப் பின்னர் இந்த புதிய அரசு உருவாகியுள்ளது.

    Sharad Pawar admittss Ajit talking with BJP

    இந்நிலையில் டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் என்சிபி தலைவர் சரத்பவார் 1 மாத அரசியல் குழப்பங்களின் பின்னணி குறித்து பல தகவல்களை தெரிவித்திருக்கிறார். அதில் சர்ச்சைக்குரிய அஜித்பவார் குறித்து சரத்பவார் கூறியதாவது:

    என்சிபியுடன் இணைந்து புதிய அரசு அமைப்பது தொடர்பாக முன்னாள் முதல்வர் பட்னாவிஸ், எங்கள் கட்சியின் அஜித் பவாருடன் பேசியிருந்தார். அது எனக்குத் தெரியும். நானும் பாஜக என்ன சொல்கிறது என பாருங்கள் என அஜித் பவாரிடம் கூறியிருந்தேன்.

    முரசொலி விவகாரம்... ராமதாஸ் மீது மானநஷ்ட வழக்கு... திமுக அதிரடிமுரசொலி விவகாரம்... ராமதாஸ் மீது மானநஷ்ட வழக்கு... திமுக அதிரடி

    அதன்பின்னர் நான் வேறு வேலைகளில் பிசியாகிவிட்டேன். சிவசேனாவுடன் தீவிரமான பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். சிவசேனாவின் சஞ்சய் ராவத், எங்களுடன் இணைவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தார். பாஜக கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேறினால் மகாராஷ்டிராவில் புதிய அரசியல் களம் உருவாகும் என உணர்ந்திருந்தேன்.

    அதேநேரத்தில் பாஜகவை அஜித்பவார் ஆதரிப்பார் என நினைக்கவில்லை. நான் டெல்லி அரசியலில் தீவிரமாக இருந்த போது மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முகமாக இருந்தவர் அஜித்பவார். ஆனால் பாஜகவுடன் இணைந்து துணை முதல்வரானது தவறு என்பதை அஜித்பவார் உணர்ந்துவிட்டார். இவ்வாறு சரத்பவார் கூறியுள்ளார்.

    English summary
    NCP President sharad Pawar said that he known Ajit Pawar talked with BJP for the New Govt formation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X