மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடுத்த அதிரடி.. அஜித் பவாரை மன்னித்தார் சரத் பவார்.. பெரும் குழப்பத்தில் பாஜக

Google Oneindia Tamil News

Recommended Video

    Ajit Pawar resigns as Maharashtra deputy CM | துணை முதல்வர் பதவியிலிருந்து விலகினார் அஜீத் பவார்

    மும்பை: அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன்தான் இருப்பார் என்றும், சரத் பவார் அவரை மன்னித்துவிட்டார் என்றும் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.

    பாஜகவின் பட்னாவிசுடன் இணைந்து ஆட்சியமைக்க முயன்றவர் அஜித் பவார். கடந்த சனிக்கிழமை, அதிகாலை, பட்னாவிஸ் முதல்வராகவும, அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். இந்த நிலையில், நேற்று இருவருமே ராஜினாமா செய்துவிட்டனர்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து எம்எல்ஏக்கள் அனைவருடனும்தான் வருவதாக, அஜித் பவார் கூறியதாகவும், அது நடக்கவில்லை என்பதால் ராஜினாமா செய்வதாகவும் பட்னாவிஸ் தனது நேற்றைய பேட்டியில் தெரிவித்தார்.

    கிளீன் போல்ட்.. இதெப்படி இருக்கு.. நிதின் கத்கரியை நக்கலடிக்கும் என்சிபி!கிளீன் போல்ட்.. இதெப்படி இருக்கு.. நிதின் கத்கரியை நக்கலடிக்கும் என்சிபி!

    மன்னிப்பு

    மன்னிப்பு

    ஆனால் அஜித் பவார் ஏன் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் என்பதற்கான சரியான காரணம் தனக்கு தெரியாது என்றார் பட்னாவிஸ். இந்த நிலையில், அஜித் பவார் நிலை என்ன என்ற கேள்வி எழுந்தது. ஆனால், அவரை என்சிபி தலைவர் சரத் பவார் மன்னித்துவிட்டதாக அக்கட்சி தலைவர்களில் ஒருவரான நவாப் மாலிக் இன்று அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    கட்டியணைப்பு

    கட்டியணைப்பு

    பாஜகவுடன் இணைந்தது தவறு என அஜித் பவார் இப்போது ஒப்புக் கொண்டார். எனவே அஜித் பவாரை சரத் பவார் மன்னித்துவிட்டார் என்றும் நவாப் மாலிக் தெரிவித்தார். ஏற்கனவே என்சிபி தலைவர்களில் ஒருவரான, சுப்ரியா சுலே, அஜித் பவாரை கட்டியணைத்து வரவேற்றார். எனவே அஜித் பவார் மீண்டும் என்சிபியில் முக்கிய இடத்தை பிடிக்க போவது உறுதியாகியுள்ளது.

    உத்தவ் தாக்ரே

    உத்தவ் தாக்ரே

    இதனிடையே, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே நாளை, மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளில் என்சிபி, காங்கிரஸ், சிவசேனா ஈடுபட்டுள்ளது.

    குழப்பத்தில் பாஜக

    குழப்பத்தில் பாஜக

    அஜித் பவாரை உடனடியாக சரத் பவார் மன்னித்துவிட்டதாக அறிவித்துள்ளது பெரும், கேள்விகளை பாஜக வட்டாரத்தில் எழுந்துள்ளது. இது சரத் பவார் நடத்திய நாடகமா என்ற என்ற கேள்வி பாஜக தலைவர்களை குடைந்து வருகிறது.

    English summary
    Sharad Pawar has forgiven Ajit Pawar, says Nawab malik at a press meet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X