மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜனாதிபதி பதவியா? என் மகளுக்குதான் மத்திய அமைச்சர் பதவி தருவதாக சொன்னாங்க.. சரத்பவார்

Google Oneindia Tamil News

Recommended Video

    மகாராஷ்டிராவின் அரசியல் சாணக்கியர்... சரத் பவார்

    மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பாஜகவுடன் கூட்டணி வைத்தால் மகள் சுப்ரியா சுலேவுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியதாகவும் அதை ஏற்க மறுத்ததாகவும் என்சிபி கட்சியின் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.

    மராத்தி மொழி சேனல் ஒன்றுக்கு சரத்பவார் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் உங்களை இந்திய ஜனாதிபதியாக்குவதாக வாக்குறுதிகள் வழங்கப்பட்டதா? என செய்தியாளர் அவரிடம் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு அவர் அது போன்ற வாக்குறுதிகள் வழங்கப்படவில்லை என்று கூறினார். அவர் மேலும் கூறுகையில் பாஜகவுடன் இணைந்து பணியாற்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

    முரசொலி விவகாரம்... ராமதாஸ் மீது மானநஷ்ட வழக்கு... திமுக அதிரடி முரசொலி விவகாரம்... ராமதாஸ் மீது மானநஷ்ட வழக்கு... திமுக அதிரடி

    பாஜகவுடன் இணைந்து

    பாஜகவுடன் இணைந்து

    அதற்கு நான் நமது தனிப்பட்ட நட்பு நல்ல முறையில் உள்ளது. அது அப்படியே இருக்க வேண்டும். ஆனால் பாஜகவுடன் இணைந்து பணியாற்றுவது முடியாத காரியம்.

    மறுத்தேன்

    மறுத்தேன்

    மேலும் எனது மகளும் புனே மாவட்டம் பாராமதியின் எம்பியுமான சுப்ரியா சுலேவுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் தருவதாக தெரிவித்தார். அதை நான் மறுத்துவிட்டேன் என்றார் சரத்பவார்.

    பவாரின் அழைப்பு

    பவாரின் அழைப்பு

    சரத்பவார் மீது மோடிக்கு எப்போதும் மதிப்புண்டு. மகாராஷ்டிரா தேர்தல் பிரச்சாரத்தின் போது பவாருக்கு எதிராக விமர்சனங்களை முன் வைக்கக் கூடாது என மோடி கண்டிப்புடன் தெரிவித்திருந்தார். புனேவில் உள்ள வசந்த்தாதா சர்க்கரை ஆலைக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு பவாரின் அழைப்பை ஏற்று மோடி சென்றிருந்தார்.

    சிவசேனா அணுகியது

    சிவசேனா அணுகியது

    அப்போது பொது வாழ்க்கையில் ஈடுபடுவது எப்படி என்பதற்கு சிறந்த உதாரணம் சரத்பவார் என புகழாரம் சூட்டியிருந்தார். மேலும் மோடி கூறுகையில் தனக்கு பவார் மீது தனிப்பட்ட முறையில் மதிப்பு உண்டு. நான் குஜராத் முதல்வராக இருந்த போது அவரது வழிகாட்டலை நான் பின்பற்றினேன். இதை நான் பொதுவெளியில் பெருமையாக கூறுகிறேன் என்றார். மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் என்சிபி- காங்கிரஸ் கட்சியை கூட்டணிக்கு சிவசேனா அணுகிய போது பாஜகவும் அணுகியது தற்போது தெரியவந்துள்ளது.

    English summary
    NCP Chief Sharad Pawar in a Marathi TV Channel says that PM Narendra Modi offered to give cabinet berth for Supriya Sule. But I refused.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X