மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

370-வது பிரிவு நீக்கத்தால் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் அதிகரிக்கும்: சரத்பவார் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

மும்பை: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு நீக்கப்பட்டதால் அங்கு பயங்கரவாதம் அதிகரிக்கும் சூழ்நிலை உள்ளது என தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் குற்றம்சாட்டியுள்ளார்.

அண்மையில் பாகிஸ்தான் சென்றுவிட்டு நாடு திரும்பிய சரத்பவார், மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:

Sharad Pawar slams Centre on revoke Article 370

பாகிஸ்தானுக்கு சென்ற எனக்கு அன்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. பாகிஸ்தானியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக நமது அரசுதான் பொய்யான தகவல்களைப் பரப்புகிறது.

பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்கு வர இயலாமல் போகலாம். ஆனால் இந்தியர்களை பாகிஸ்தானியர்கள் உறவினர்களாகவே பார்க்கின்றனர்.

காங்கிரஸில் அதிரடி மாற்றங்கள்... ம.பி, உ.பி, டெல்லி தலைவர்கள் விரைவில் நியமனம்!காங்கிரஸில் அதிரடி மாற்றங்கள்... ம.பி, உ.பி, டெல்லி தலைவர்கள் விரைவில் நியமனம்!

பாகிஸ்தான் குறித்த மத்திய அரசின் தகவல்கள் தவறானவை. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு நீக்கப்பட்டிருப்பதன் மூலம் சிறுபான்மை மக்கள் ஒடுக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நடவடிக்கையால் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத செயல்கள் அதிகரிக்கவே செய்யும்.

இவ்வாறு சரத்பவார் பேசினார்.

English summary
Nationalist Congress Party President Sharad Pawar praised on Pakistan for its hospitality.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X