மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மக்கள் பொருள் வாங்க மாட்டேங்குறாங்க.. பொருளாதார வீழ்ச்சிக்கு நிஜ காரணம் இதுதான்.. கண்டுகொள்ளாத அரசு

Google Oneindia Tamil News

Recommended Video

    இனி 12 பொதுத்துறை வங்கிதான்: நிர்மலா சீதாராமன் அதிரடி | Nirmala Sitharaman Pressmeet

    மும்பை: உற்பத்தி மற்றும் கட்டுமானத்தில் நிலவும் மந்தநிலை தவிர, நுகர்வு அதாங்க மக்களின் வாங்கும் திறன் செங்குத்தான சரிந்துவிட்டதும் பொருளாதார வீழ்ச்சிக்கு பெரிய காரணம்.

    நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்து, 5 சதவீதமாக உள்ளது என்பதை, மத்திய புள்ளிவிவர அலுவலகம் (சிஎஸ்ஓ) நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

    தொழில்துறை உற்பத்தி (ஐ.ஐ.பி) தரவுகளின் குறியீட்டில் சுட்டிக்காட்டியுள்ளபடி, சுரங்கம், உற்பத்தி மற்றும் கட்டுமானம் உட்பட பெரும்பாலான பிரிவுகளில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது. நிதி, ரியல் எஸ்டேட் மற்றும் தொழில்முறை சேவைகளின் ஷார்ப் மந்தநிலை மற்றும் தனியார் நுகர்வு ஆகியவை கவலைக்குரியவையாக உள்ளன.

    10 வங்கிகள் இணைப்பு.. நிர்மலா சீதாராமன் அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு.. ஊழியர்கள் இன்று போராட்டம்!10 வங்கிகள் இணைப்பு.. நிர்மலா சீதாராமன் அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு.. ஊழியர்கள் இன்று போராட்டம்!

    தொடர் வீழ்ச்சி

    தொடர் வீழ்ச்சி

    மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி ஏற்கனவே மார்ச் வரையிலான காலாண்டில் 5.8 சதவீதமாகக் கடுமையாக வீழ்ச்சியடைந்தது. இது 20 காலாண்டுகளில் இல்லாத குறைவு. இப்போது வளர்ச்சி மேலும் சரிந்துவிட்டது, பெரும்பாலான மதிப்பீடுகளுக்குக் கீழே வந்துள்ளது. 5 சதவீதம் என்பது சுமார் ஆறு ஆண்டுகளில் இல்லாத சரிவாகும்.

    உற்பத்தி துறை பூஜ்யம்

    உற்பத்தி துறை பூஜ்யம்

    சுரங்கத்துறையை பொறுத்தளவில், ஜி.வி.ஏ (மொத்த மதிப்பு கூட்டப்பட்ட) வளர்ச்சி மார்ச் காலாண்டில் 4.2 சதவீதத்திலிருந்து 2.7 சதவீதமாக சரிந்தது. அதே நேரத்தில் உற்பத்தி துறை, கடந்த காலாண்டில் 3 சதவீத வளர்ச்சியுடன் இருந்தது. தற்போது அது ஏறத்தாழ பூஜ்யமாகிவிட்டது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் உற்பத்தி துறை 12 சதவீத வளர்ச்சியுடன் இருந்தது. அதாவது ஒரே வருடத்தில் 12 சதவீதத்திலிருந்து பூஜ்யத்திற்கு சரிவடைந்துள்ளோம். ரியல் எஸ்டேட் மற்றும் தொழில்முறை சேவைகள் மார்ச் காலாண்டில் 9.5 சதவீதமாக இருந்தது. இப்போது அது 5.9 சதவீதமாக இன்னும் சரிந்தன.

    வேளாண்மை

    வேளாண்மை

    வேளாண்மை ஜி.வி.ஏ கடந்த ஆண்டு 5 சதவீதமாக இருந்தது. இப்போது 2 சதவீதமாகக் குறைந்துவிட்டாலும், தொடர்ச்சியாக சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆச்சரியம் என்னவென்றால், எப்படியும், குறைந்த அடிப்படை மற்றும் அதிக விலைகள் அடுத்தடுத்த காலாண்டுகளில் வளர்ச்சிக்கு உதவுகின்றனவா என்பதைப் பார்க்க வேண்டும்.

    வாங்கும் திறன்

    வாங்கும் திறன்

    மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 55-58 சதவீதமாக இருப்பது நுகர்வுதான். எனவே இப்போது நுகர்வு கடும் வீழ்ச்சியடைந்துள்ளது ஒரு பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. இந்தியாவில் உள்நாட்டு தேவையின் முக்கிய அம்சமாக நுகர்வு உள்ளது. மார்ச் இறுதி காலாண்டில் 7.2 சதவீதமாக இருந்த நுகர்வு, ஜூன் காலாண்டில் 3.1 சதவீதமாக சரிவடைந்துள்ளது. பொதுமக்களின் வாங்கும் திறனை அதிகரிக்க வேண்டியதுதான் அரசு இப்போது செய்ய வேண்டிய முதல் வேலை. ஆனால் அரசு அதை தவிர மற்றவற்றில்தான் கவனம் செலுத்தி வருகிறது.

    இணைப்பு இப்போது தேவையா

    இணைப்பு இப்போது தேவையா

    பொதுத்துறை வங்கிகளை இணைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது, கடன் வழங்குவதை மேலும் பாதிக்கும். பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு கடன் வழங்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கு வங்கி அமைப்பு அவசரமாக தேவைப்படும் நேரத்தில், வங்கி இணைப்புகள் இடையூறுகளைத்தான் ஏற்படுத்தும். ஒருங்கிணைப்பு செயல்பாட்டில் உடனடி கவனம் செலுத்துவதால், வங்கியாளர்கள் பெரும்பாலும் கடன் வழங்குவதை விட சொத்து தரத்தின் மீதுதான் கவனம் வைப்பார்கள்.

    வட்டி குறைப்பு பலன் தரும்

    வட்டி குறைப்பு பலன் தரும்

    ரிசர்வ் வங்கியின் வட்டி விகித குறைப்பு மற்றும் வங்கிகளின் குறைந்த வட்டியிலான கடன்கள், கடன் வளர்ச்சிக்கு உதவக்கூடும். ஆனால் வேலைவாய்ப்பு சந்தையில் நிச்சயமற்ற தன்மை மற்றும் கடன் வாங்குபவர்களிடையே வளர்ந்து வரும் எதிர்மறை எண்ணம் ஆகியவை கடன் வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய முக்கிய காரணிகளாக மாறும். இது அரசுக்கு பெரும் சவாலாகும்.

    English summary
    Apart from the slowdown in manufacturing and construction, the sharp decline in consumption and the purchasing power of the people is a major contributor to the economic downturn.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X