மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொருளாதார மந்தநிலை.. மன்மோகன்சிங் எச்சரிக்கையை கேட்டு நடங்க... மத்திய அரசுக்கு சிவசேனா அட்வைஸ்

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : Finance reform announcements not reflected in the ground so far

    மும்பை: நாட்டின் பொருளாதார மந்தநிலை தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவிக்கும் கருத்துகளை உன்னிப்பாக கவனித்து நடந்து கொள்ள வேண்டும் என பிரதமர் மோடிக்கு பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனா அறிவுறுத்தியுள்ளது.

    பொருளாதார நிலை தொடர்பான தகவல்கள் பெரும் கவலைக்குரியதாக உள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசின் கொள்கைகளால்தான் நாட்டின் பொருளாதாரம் மந்தநிலைக்கு போய்விட்டது என்பது பொதுவான குற்றச்சாட்டு.

    Shiv Sena advises to BJP on Economy slowdown

    பாஜகவை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி போன்றவர்கள் நிதி அமைச்சராக இருந்த மறைந்த அருண்ஜேட்லி, தற்போதைய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை பொருளாதார மந்த நிலை தொடர்பாக விமர்சித்து வருகிறார். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கும் பொருளாதார தேக்க நிலை குறித்து கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

    ஆனால் மன்மோகன்சிங் கருத்துகளை மத்திய அரசு நிராகரித்தது. அத்துடன் மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில் சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் 11-வது இடத்தில் இந்தியா இருந்தது; இப்போது இந்தியா 5-வது இடத்தில் இருக்கிறது எனவும் பதில் தரப்பட்டது.

    டிகே சிவகுமார் கைது.. கர்நாடகா பந்த்துக்கு காங்கிரஸ் அழைப்பு .. பெங்களூர்-மைசூர் ரோடு ஸ்தம்பிப்புடிகே சிவகுமார் கைது.. கர்நாடகா பந்த்துக்கு காங்கிரஸ் அழைப்பு .. பெங்களூர்-மைசூர் ரோடு ஸ்தம்பிப்பு

    இந்நிலையில் பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனாவும் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் கருத்துகளை உள்வாங்கி நடவடிக்கைகளை மத்திய அரசு மாற்றிக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடிக்கு அறிவுரை கூறியுள்ளது. சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில் இது தொடர்பாக எழுதப்பட்டுள்ளதாவது:

    பொருளாதார தேக்க நிலை விவகாரத்தில் எந்த ஒரு அரசியல் பார்வையும் இருக்கக் கூடாது. ஜம்மு காஷ்மீர் விவகாரமும் பொருளாதார தேக்க நிலையும் இருவேறுபட்ட விவகாரங்கள். பொருளாதார தேக்க நிலையில் அரசியல் பார்க்கக் கூடாது என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார். இதை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

    பொருளாதார வல்லுநர்கள் ஆலோசனையை கேட்டு நிலைமையை சரி செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும். இவ்வாறு சாம்னாவில் எழுதப்பட்டுள்ளது.

    English summary
    Shiv Sena hit out at the Centre and asked to pay heed to Former Prime Minsiter Manmohan Singh’s warning on Economy slowdown issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X