மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகாராஷ்டிராவில் சிவ சேனா அவர்கள் வழியை பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.. சரத் பவார் அதிரடி பேட்டி

Google Oneindia Tamil News

Recommended Video

    மகாராஷ்டிராவில் புதிய திருப்பம்... சிவசேனாவிற்கு ஷாக் கொடுத்த சரத் பவார்

    மும்பை: மகாராஷ்டிராவில் பாஜக மற்றும் சிவசேனா ஆகியவை சட்டசபை தேர்தலின்போது இணைந்து போட்டியிட்டன, இப்போது அவர்கள் வழியை அவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டியது தான் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

    முதல்வர் பதவி உள்ளிட்ட அதிகாரங்கள் பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக பாஜக மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் இடையே, நடைபெற தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மோதல் ஏற்பட்டது.

    இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க, சிவசேனா தொடர்ச்சியாக, முயற்சி செய்தபடியே உள்ளது.

    அதிபர் தேர்தலில் தமிழர், முஸ்லிம்கள் வாக்குகள் எனக்கு கிடைக்கவில்லை.. கோத்தபாய ராஜபக்சே ஒப்புதல்அதிபர் தேர்தலில் தமிழர், முஸ்லிம்கள் வாக்குகள் எனக்கு கிடைக்கவில்லை.. கோத்தபாய ராஜபக்சே ஒப்புதல்

    காங்கிரஸ்

    காங்கிரஸ்

    ஆனால் இதற்கு, தேசியவாத காங்கிரசுடன் கூட்டணியில் உள்ள, காங்கிரஸ் கட்சி, முட்டுக்கட்டை போட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சனிக்கிழமை, மாலை 4 மணியளவில் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையியல், திடீரென அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது,.

    சரத்பவார் பேட்டி

    சரத்பவார் பேட்டி

    காங்கிரஸ் தரப்பிலிருந்து உறுதியான ஒரு பதில் வராத நிலையில் தான் இவ்வாறு இழுபறி நிலை நீடித்து வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் பேசிய சரத்பவார், மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலின்போது சிவசேனா மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து போட்டியிட்டன. அவர்கள் அவர்களுக்கான அரசியலை ஏற்கனவே தேர்ந்தெடுத்து விட்டனர். அவர்கள் தங்கள் பாதையை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டியதுதான் என்று தெரிவித்தார்.

    சரத் பவார் ஆலோசனை

    சரத் பவார் ஆலோசனை

    இதனிடையே, இன்று மாலை காங்கிரஸ் கட்சியின், இடைக்கால தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து, சரத்பவார் ஆலோசனை நடத்த உள்ளார். மகாராஷ்டிராவில் அடுத்த கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை நடக்க வாய்ப்பு உள்ளது.

    குடியரசு தலைவர் ஆட்சி

    குடியரசு தலைவர் ஆட்சி

    மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு இருந்தாலும் அங்கு சட்டசபை கலைக்கப்படவில்லை, என்பதால் இன்னும் 6 மாத காலத்திற்குள் அங்கு யார் வேண்டுமானாலும் ஆட்சியமைக்க உரிமை கோரும் வாய்ப்பு திறந்தே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Ahead of Nationalist Congress Party supremo Sharad Pawar's meeting with Congress interim chief Sonia Gandhi, the former on Monday said in Maharashtra the BJP and Shiv Sena had fought the elections together and "they have to choose their paths".
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X