மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வெட்கங்கெட்ட அரசியல்.. இறக்கை ஒட்ட நறுக்கப்பட்ட அஜித் பவார்.. சாம்னாவில் சேனா கிழி..கிழி

Google Oneindia Tamil News

மும்பை: மும்பையில் பாஜக வெட்கங்கெட்ட அரசியலில் ஈடுபட்டுவிட்டதாகவும் அஜித் பவாரின் இறகுகள் ஒட்ட நறுக்கப்பட்டுவிட்டதாக சாம்னாவில் சிவசேனா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

மகாராஷ்டிரா வெள்ளிக்கிழமை வரை காங்கிரஸ்- என்சிபி ஆதரவுடன் சனிக்கிழமை உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்பது குறித்து ஆட்சி அமைக்க உரிமை கோரலாம் என திட்டமிட்டிருந்தார். ஆனால் ஒரு நாள் இரவில் என்ன செய்ய முடியும் என கேட்போருக்கு மகாராஷ்டிரா அரசியல்தான் உதாரணம்.

ஒரு நாள் இரவில் அத்தனையையும் புரட்டி போட்டது போல் அஜித் பவார் பாஜகவுடன் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க உதவியுள்ளார்.

மகன் போல நடத்தினேன்.. அஜித் மீது அதிர்ச்சியில் சரத் பவார்.. பதிலடி தர களமிறங்கும் சுப்ரியா சுலே! மகன் போல நடத்தினேன்.. அஜித் மீது அதிர்ச்சியில் சரத் பவார்.. பதிலடி தர களமிறங்கும் சுப்ரியா சுலே!

சாம்னா

சாம்னா

அஜித் பவார் எடுத்த முடிவு என்சிபியின் முடிவல்ல என்பதை சரத்பவார் தெளிவுப்படுத்திவிட்டார். அஜித்பவாரின் இந்த முடிவால் சிவசேனா கடும் கொந்தளிப்பில் உள்ளது. அதிலும் பாஜக மீது கோபத்தை கொப்பளிக்கும் நிலையில் உள்ளது. இதன் வெளிப்பாடாக சாம்னாவில் பாஜகவை கிழி கிழி என கிழித்துவிட்டது.

12 மணி நேரம்

12 மணி நேரம்

இதுகுறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் கூறிப்பிடுகையில் இது வெட்கங்கெட்ட அரசியல். சரத்பவார் பழிவாங்கப்பட்டுள்ளார். 12 மணி நேரத்தில் அஜித்பவார் தன் தலையில் தானே மண்ணை அள்ளிக் கொட்டி கொண்டார்.

இறகுகள்

இறகுகள்

அவர் சட்டசபையின் என்சிபி எம்எல்ஏக்களின் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதால் அவரது இறகுகள் ஒட்ட நறுக்கப்பட்டுவிட்டன. நேற்றைய தினம் மும்பையில் நடந்தவை எல்லாம் கேலிக்கூத்தாகும் என தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றம்

இதனிடையே பாஜக தனது பெரும்பான்மையை நிரூபிக்க 30-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிவசேனா, காங்கிரஸ், என்சிபி ஆகிய கட்சிகள் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளன.

பெரும்பான்மை

பெரும்பான்மை

அதில் அவசர அவசரமாக காலை பொழுதிலேயே எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தேவேந்திர பட்னவீஸுக்கு முதல்வராக மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் என வழக்கில் குறிப்பிட்டுள்ளன. அது போல் குதிரை பேரத்தை தடுக்க உடனே பெரும்பான்மையை நிரூபிக்க வழி வகுக்குமாறும் கோரியுள்ளனர்.

English summary
Shiv Sena's Saamana says that This is a Politics of Shamelessness and Ajit Pawar destroys himself within12 hours.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X