மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மகாராஷ்டிராவில் இந்த 5 வாய்ப்புகளில் ஒன்றுதான் நடக்கப் போகிறது... சஞ்சய் ராவத் ஆரூடம்

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக பாஜக- சிவசேனா இடையே இழுபறி நீடித்து வருகிறது. இந்த நிலையில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், மகாராஷ்டிராவில் என்னதான் அடுத்து நடக்கும் என 5 வாய்ப்புகளை பட்டியலிட்டுள்ளார்.

சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில் சஞ்சய் ராவத் எழுதிய கட்டுரையில் இடம்பெற்றுள்ளவை:

Shiv Senas Sanjay Raut offers five scenarios on Maharashtra tussle

சட்டசபை தேர்தல் முடிந்த உடனே சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரேவை பெரிய மனதுடன் தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்து பேசவில்லை. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே சிவசேனாவுடன் புதிய ஆட்சி குறித்து பேசியிருக்க வேண்டும்.

பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கத்தான் மக்கள் வாக்களித்துள்ளனர் . ஆனால் பாஜகவின் பிடிவாதத்தால் தேர் இப்போது சகதியில் சிக்கியிருக்கிறது. இந்த தேரை சகதியில் இருந்து மீட்பதற்கு அமித்ஷா தலையிடாமல் இருப்பதும் புதிராக இருக்கிறது.

இனி மகாராஷ்டிராவில் என்னதான் நடக்கும்?

  • சிவசேனாவின் ஆதரவு இல்லாமல் பாஜக ஆட்சி அமைக்கலாம். ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது பெரும்பான்மையை நிரூபிக்க 40-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் அக்கட்சிக்கு தேவைப்படும்.
  • 2014-ல் தேசியவாத காங்கிரஸ் பாஜகவை ஆதரித்ததைப் போன்ற ஒரு நிலைமை ஏற்படலாம். அப்போது மத்தியில் மகள் சுப்ரியா சூலேவுக்கும் மாநிலத்தில் அஜித் பவாருக்கும் பதவிகள் திரும்ப கொடுக்கப்படலாம். ஆனால் 2014-ல் தாம் செய்தது தவறு என சரத்பவார் கூறியிருப்பதால் அதற்கான வாய்ப்பு இல்லை.
  • சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைக்க முன்வரலாம். சிவசேனாவுக்கு முதல்வர் பதவி அளிக்கப்பட்டதால் அரசை நடத்த முடியும். மூன்று வெவ்வேறான கட்சிகள் ஆட்சி அமைப்பதால் குறைந்தபட்ச பொதுசெயல் திட்டம் உருவாக்கப்படும்.
  • பாஜகவும் சிவசேனாவும் தங்களது நிலைப்பாடுகளில் இருந்து இறங்கி புதிய ஆட்சியை அமைக்கலாம். இதுதான் மிகச் சரியான வாய்ப்பு. ஆனால் பிடிவாதங்களால் இது சாத்தியமில்லை.
  • மத்திய ஏஜென்சிகள் மூலம் கட்சிகளை உடைக்க பாஜக முயற்சிக்கலாம். ஆனால் பிரதமர் மோடியின் இமேஜை இது பாதிக்கும் என பாஜக கருதலாம்.

இவ்வாறு சஞ்சய் ராவத் எழுதியுள்ளார்.

English summary
Shiv Sena Senior leader Sanjay Raut has offered five scenarios on the Maharashtra tussle to form new govt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X