மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தேசிய ஜனநாயக கூட்டணி ஒன்றும் ஒரே கட்சிக்கு சொந்தமானதல்ல.. சிவசேனா அட்டாக்

Google Oneindia Tamil News

Recommended Video

    சிவசேனா தலைமையில் ஆட்சியமைக்க முடிவு ? | NCP-Congress Concede CM Post to Shiv Sena.

    மும்பை: தேசிய ஜனநாயக கூட்டணியானது ஒரு கட்சியின் சொத்து அல்ல என சிவசேனாவின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

    மகாராஷ்டிரத்தில் பாஜக- சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல்வர் பதவியில் சரிசம பங்கு கேட்டதால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து சிவசேனா ஆட்சி அமைக்க காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது.

    இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து சிவசேனா வெளியேறியது. இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கூட்டணி கட்சிகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சித்தாந்தங்கள் இருக்கும்.

    மறைமுகமாக

    மறைமுகமாக

    ஆனால் அவர்கள் அனைவரும் ஒரு பெரிய குடும்பம் மாதிரி. சிறிய கருத்து வேறுபாடுகளால் பிரிந்து செல்லக் கூடாது என மோடி மறைமுகமாக சிவசேனாவுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

    தமிழக அரசியலில் நேற்று அதிசயம் நடந்தது.. நாளையும் அதிசயம் நடக்கும்.. என்ன சொல்கிறார் ரஜினி?தமிழக அரசியலில் நேற்று அதிசயம் நடந்தது.. நாளையும் அதிசயம் நடக்கும்.. என்ன சொல்கிறார் ரஜினி?

    கூட்டணி

    கூட்டணி

    இதையடுத்து பிரதமர் மோடி தனது ட்விட்டரில் கூறுகையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினருடன் ஆரோக்கியமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தியாவின் பன்முகத்தன்மையையும் 130 கோடி இந்தியர்களின் கனவுகளையும் இந்த கூட்டணி குறிக்கிறது.

    சஞ்சய் ராவத்

    சஞ்சய் ராவத்

    நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து விவசாயிகள், இளைஞர்கள், ஏழைகளின் வாழ்க்கையை மாற்ற வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சஞ்சய் ராவத் செய்தியாளர்களை சந்தித்தார்.

    பணம் செலுத்தும் விருந்தினர்கள்

    பணம் செலுத்தும் விருந்தினர்கள்

    அவர் கூறுகையில் தேசிய ஜனநாயக கூட்டணி என்பது ஒரு கட்சியின் சொத்து அல்ல. தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் பணம் செலுத்தும் விருந்தினர்கள் உள்ளனர். பீகார் முதல்வர் நிதீஷ்குமார், லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் ஆகியோரும் மோடிக்கு எதிராக பேசுகிறார்கள். ஆயினும் அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறார்கள்.

    பழைய கூட்டணிக்கும் இன்று உள்ள கூட்டணிக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. தேசிய ஜனநாயக கட்சியானது ஒரே கட்சிக்கு சொந்தமானதில்லை என ராவத் தெரிவித்தார்.

    English summary
    Sanjay Raut says that NDA is not property of one party and it has paying guests.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X