மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிவசேனா சின்னம்: உடனே கொடுங்க.. தேர்தல் ஆணையத்திற்கு ஏக்நாத் திடீர் கடிதம்.. உத்தவ் திட்டம் என்ன?

Google Oneindia Tamil News

மும்பை: சிவசேனா கட்சி, சின்னம் யாருக்கு என்பதில் இன்னும் பிரச்சினை ஓயாத நிலையில் சின்னத்தை உடனே கொடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு ஏக்னாத் ஷிண்டே திடீர் கடிதம் அனுப்பியுள்ளது உத்தவ் தாக்கரே அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தேவேந்திர பட்னாவிஸ் தலமையிலான பாஜனதாவும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றியும் பெற்றது.

ஆனால் முதல்வர் பதவி பிரச்சினையில் பாஜனதாவுக்கும் சிவசேனாவுக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பாஜக கூட்டணியில் இருந்து விலகினார்.

உத்தவ் தாக்கரேக்கு கடும் அதிர்ச்சி.. 3000 உறுப்பினர்கள் கூண்டோடு அணி மாற்றம்.. ஏக்நாத் ஷிண்டே குஷி! உத்தவ் தாக்கரேக்கு கடும் அதிர்ச்சி.. 3000 உறுப்பினர்கள் கூண்டோடு அணி மாற்றம்.. ஏக்நாத் ஷிண்டே குஷி!

உத்தவ் தாக்கரேக்கு எதிராக ஏக்னாத்

உத்தவ் தாக்கரேக்கு எதிராக ஏக்னாத்

மேலும், இந்துத்வா கொள்கையில் மாறுபட்ட காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி அமைத்து முதல்வராக பதவியேற்றார். அதன்படி மகா விகாஸ் அகாடி கூட்டணியின் ஆட்சி கடந்த 2 ஆண்டுகளை கடந்து ஆட்சி நடந்துவந்தது. இந்த நிலையில், திடீரென சிவசேனாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், உத்தவ் தாக்கரேவின் நெருக்கமானவருமான ஏக்னாத் ஷிண்டே தனக்கு ஆதரவாக சில எம்.எல்.ஏக்களை திரட்டி உத்தவ் தாக்கரேக்கு எதிராக திரும்பினார்.

முதல்வராக பதவியேற்ற ஷிண்டே

முதல்வராக பதவியேற்ற ஷிண்டே

தொடர்ந்து அவர் தனக்கு ஆதரவாக சில எம்எல்ஏக்களை திரட்டி பாஜகவுடன் கூட்டணி வைப்பதாக அறிவித்து உத்தவ் தாக்கரேக்கு பெருத்த தலைவலியை உருவாக்கினார். சிவசேனா அதிருப்தி அணியாக உருவாகிய ஏக்னாத் ஷிண்டே பாஜனதாவுடன் கூட்டணி வைத்து மமாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றார். இதனால் உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியாகவும், ஏக்னாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணியாகவும் சிவசேனா இரண்டாக பிரிந்தது.

உத்தவ் தாக்கரேக்கு அடிமேல் அடி

உத்தவ் தாக்கரேக்கு அடிமேல் அடி

இதையடுத்து இரு அணிகளும் தாங்கள் தான் உண்மையான சிவசேனா எனக் கோரி வருகிறது. சின்னம் ஒதுக்குவது தொடர்பாக தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க தடை கோரிய உத்தவ் தாக்கரேவின் மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உத்தவ் தாக்கரே ஆதரவாளர்கள் தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தாவி வருகின்றனர். இதனால், தொடர்ந்து அடி மேல் அடி வாங்கி வரும் உத்தவ் தாக்கரே தரப்பு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்

தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்

இந்த நிலையில், சின்னத்தை விரைவாக தங்கள் தரப்புக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரி தேர்தல் ஆணையத்திற்கு ஏக்நாத் ஷிண்டே கடிதம் எழுதியுள்ளார். அந்தேரி கிழக்கு தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தங்களுக்கு சின்னம் ஒதுக்க வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே கடிதத்தில் கூறியுள்ளார். அந்தேரி கிழக்கு தொகுதியில் கூட்டணி கட்சியான பாஜகவே போட்டியிட உள்ளது என்றாலும், சிவசேனாவின் வில் அம்பு சின்னத்தை உத்தவ் தாக்கரே தரப்பு பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.

உத்தவ் தாக்கரே பிளான்?

உத்தவ் தாக்கரே பிளான்?

எனவே, சின்னத்தை தங்கள் தரப்புக்கு விரைவாக ஒதுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால், சின்னத்தை தங்கள் தரப்புக்கு பெற உத்தவ் தாக்கரே தரப்பினரும் முயற்சி எடுப்பார்கள் என்பதால் மகாராஷ்டிராவில் அரசியல் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.

English summary
Eknath Shinde has sent a sudden letter to the Election Commission asking Shiv Sena to give the symbol immediately, which has created a crisis for Uddhav Thackeray's team.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X