மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கூவத்தூர், கூர்க் பார்முலாவை பின்பற்றும் சிவசேனா.. மகாராஷ்டிரத்தில் சூடுபிடித்த ரிசார்ட் அரசியல்!

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆளுநரை சந்திக்கும் பாஜக.. அடுத்தடுத்த நகர்வுகளால் பரபரக்கும் அரசியல் களம்

    மும்பை: தங்கள் கட்சி எம்எல்ஏக்கள் பாஜக உள்ளிட்ட மாற்றுக் கட்சியினரிடம் விலை போய்விடக் கூடாது என்பதற்காக சிவசேனா கூவத்தூர் பார்முலாவை கையில் எடுத்துள்ளது.

    மகாராஷ்டிரத்தில் சட்டசபை தேர்தலில் 105 இடங்களில் பாஜகவும், 56 இடங்களில் சிவசேனாவும் காங்கிரஸ் 44 இடங்களிலும் என்சிபி 54 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 146 இடங்கள் தேவை என்ற நிலையில் பாஜகவும் சிவசேனாவும் கூட்டணி ஆட்சி அமைக்கும் என சொல்லப்பட்டது.

    ஆனால் முதல்வர் பதவியில் சுழற்சி முறையில் இருக்க வேண்டும் என்றும் அதிலும் முதல் இரண்டரை ஆண்டுகள் எங்கள் கட்சியினர்தான் ஆள வேண்டும் என்றும் சிவசேனா கண்டிஷன் போட்டது. இதை பாஜக ஏற்க மறுத்துவிட்டது.

    நிதின் கட்கரி வந்தால் சரியாகும்.. மகாராஷ்டிராவில் பாஜகவின் இறுதி மூவ்.. கடைசியில் இப்படி ஆகிட்டே!நிதின் கட்கரி வந்தால் சரியாகும்.. மகாராஷ்டிராவில் பாஜகவின் இறுதி மூவ்.. கடைசியில் இப்படி ஆகிட்டே!

    குடியரசு தலைவர்

    குடியரசு தலைவர்

    இந்த நிலையில் காங்கிரஸ், என்சிபி ஆதரவுடன் ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சித்தது. அது முடியாமல் போனது. நாளைக்குள் மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் நிலை உள்ளது.

    ஹோட்டல்கள்

    ஹோட்டல்கள்

    இதனால் சிவசேனாவும், பாஜகவும் மாறி மாறி போராடி வருகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிர ஆளுநரை தேவேந்திர பட்னவீஸ் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். மேலும் ஆட்சி அமைய இன்னும் ஒரு நாள் மட்டுமே இருப்பதால் சிவசேனா எம்எல்ஏக்கள் விலை போகாமல் இருக்க மும்பையில் உள்ள ஹோட்டல்களில் இரு நாட்களுக்கு தங்குமாறு உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.

    கூவத்தூர்

    கூவத்தூர்

    இதை பார்க்கும் போது தமிழகத்தில் நடந்த கூவத்தூர் பார்முலாவையும் அங்கு நடந்த கூத்துகளையுபம் கண் முன்னே காட்டுகிறது. தமிழகத்தில் ஜெயலலிதா மறைந்தவுடன் அதிமுக இரு அணிகளாக பிரிந்தது. அப்போது ஓபிஎஸ் அணிக்கோ அல்லது திமுகவுக்கோ அதிமுகவினர் தாவிவிடக் கூடாது என சசிகலா 123 எம்எல்ஏக்களை கூவத்தூரில் தங்க வைத்தார்.

    கர்நாடகத்திலும் ரிசார்ட் அரசியல்

    கர்நாடகத்திலும் ரிசார்ட் அரசியல்

    பின்னாளில் அதிமுக ஒன்றிணைந்த போது தினகரனுக்கு ஆதரவாக இருந்த 18 எம்எல்ஏக்களும் பாண்டிச்சேரி, கர்நாடக மாநிலம் கூர்க்கில் உள்ள ரிசார்ட்களில் தங்க வைக்கப்பட்டனர். அது போல் கர்நாடகத்தில் காங்கிரஸ்- மஜத கூட்டணி ஆட்சி நடைபெற்றது. இதன் முதல்வராக குமாரசாமி இருந்தார்.

    கவலை

    கவலை

    அப்போது அதிருப்தி எம்எல்ஏக்கள் தனி விமானத்தில் மும்பைக்கு அழைத்து செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டனர். கூவத்தூர், மும்பை விவகாரங்களில் சரியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது அவர்கள் வெளியே கொண்டு வரப்பட்டனர். இதே நிலைதான் சிவசேனாவுக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது ரிசார்ட் அரசியல் முன்னெடுக்கப்படுவது அரசியல் பார்வையாளர்களை கவலையடைய செய்துள்ளது.

    English summary
    Shivsena MLAs are asked to stay in Hotel for 2 days ahead of horse trading. It recalls Koovathur incident.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X