இந்தியாவில் கொரோனாவுக்கு 99 மருத்துவர்கள் பலி.. 1302 பேர் பாதிப்பு
மும்பை: இந்தியாவில் 99 மருத்துவர்கள் கொரோனா வைரஸுக்கு பலியாகிவிட்டதாகவும் 1302 மருத்துவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ கழகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸால் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த தொற்றுக்கு பொதுமக்கள் என இல்லாது நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்களை சந்திக்கும் அரசியல்வாதிகள் என அனைவருக்கும் வைரஸ் தொற்று ஏற்படுகிறது.

இதனால் மருத்துவர்கள், செவிலியர்கள் என உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்த நிலையில் இதுவரை இந்தியாவில் கொரோனாவுக்கு 99 மருத்துவர்கள் பலியாகிவிட்டதாகவும் 1302 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு கூறுகையில், சுகாதார பணியாளர்களுக்கு நோய் பாதிப்பு குறித்த டேட்டாபேஸை உருவாக்கியுள்ளோம். மருத்துவர்களின் இறப்பு வீதம் 8 சதவீதமாக உள்ளது. மாநிலங்களிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில்தான் டாக்டர்கள் இறப்பு எண்ணிக்கை 20 சதவீதமாக அதிகரித்துள்ளது.
50 வயதுக்கு மேற்பட்ட மருத்துவர்கள் 74 சதவீதம் பேர் பலியாகிவிட்டனர். 35 முதல் 50 வயதுடைய மருத்துவர்கள் 19 சதவீதம் பேர் இறந்துள்ளனர். 35 வயதுக்குக் கீழ் 7 மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டனர். 1302 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் 586 பேர் தனியார் மருத்துவர்கள், 566 பேர் வீட்டில் கிளினீக் வைத்தவர்கள், 150 பேர் அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஆவர்.
கொரோனா தடுப்பூசி.. இந்த ஆண்டு இறுதிக்குள் வந்துவிடும்.. அமெரிக்க நிபுணர் தகவல்
மும்பையில் 1000-க்கும் மேற்பட்ட சுகாதாரத் துறை பணியாளர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அந்த நகரில் 9 மருத்துவர்கள் இறந்துள்ளனர். பாதுகாப்பு உபகரணங்களின் விலை உயர்ந்துள்ளது. பெரும்பாலான மருத்துவமனைகள் கோவிட் சென்டர்களாக மாற்ற தகுதியில்லாதவைகளாக உள்ளன என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.