மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடுத்தடுத்த என்கவுண்டர்.. அனைவரும் விடுதலை.. சொராபுதீன் ஷேக் என்கவுண்டர் வழக்கு கடந்த பாதை

Google Oneindia Tamil News

மும்பை: சொராபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக, இன்று தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், அந்த வழக்கு கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.

Sohrabuddin Sheikh Fake Encounter Case, a timeline

2005- நவம்பர் 22: சொராபுதீன் ஷேக், அவரது மனைவி கவுசர் பீ மற்றும் கூட்டாளி துளசிராம் பிரஜாபதி ஆகியோர், ஹைதராபாத்திலிருந்து பஸ்சில் சென்றபோது மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலி பகுதியில் வைத்து குஜராத் போலீசாரால் பிடித்து செல்லப்பட்டனர்.

நவம்பர் 26: சொராபுதீன் போலீசாரால் என்கவுண்டர் செய்து கொல்லப்பட்டார்.

நவம்பர் 28: கவுசர் பீ, பலாத்காரம் செய்யப்பட்டு கொலை.

2006, டிசம்பர் 28: துளசிராம் பிரஜாபதி, சப்ரி கிராமம் அருகே என்கவுண்டர் செய்யப்பட்டார்.

2010 ஜனவரி: என்கவுண்டர் வழக்குகளை சிபிஐ வசம் ஒப்படைத்தது, உச்ச நீதிமன்றம்.

ஜூலை 23: சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் அமித்ஷா குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

ஜூலை 25: அமித்ஷாவை சிபிஐ கைது செய்தது

அக்டோபர் 29: அமித்ஷாவிற்கு குஜராத் ஹைகோர்ட் ஜாமீன் வழங்கியது

2012, செப்டம்பர் 27: குஜராத்திலிருந்து மும்பைக்கு, வழக்கை மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது

2014, டிசம்பர் 30: அமித்ஷாவை வழக்கிலிருந்து விடுவித்தது மும்பை செஷன்ஸ் நீதிமன்றம்.

2016, ஆகஸ்ட் 1: அமித்ஷாவை விடுவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2018, டிச. 3: சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.ஜே.ஷர்மா முன்னிலையில், இறுதி வாதங்கள் துவங்கின.

டிச. 7: விசாரணை முடிவடைந்து, தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

டிசம்பர் 21: குற்றச்சாட்டுக்கு ஆதாரம் சமர்ப்பிக்கப்படவில்லை என கூறி குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு.

English summary
he Special CBI court in Mumbai has reserved orders in the Sohrabuddin Shaikh and Tulsiram Prajapati encounter cases. Special court judge, S J Sharma began hearing final arguments on Monday. In all 210 witnesses were examined in the case. Once the final arguments were completed, orders were reserved.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X