மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராமர் கோவில் கட்டினால் கொரோனா மறைந்துவிடுமென சிலர் நம்புகிறார்கள்.. சரத் பவார் விமர்சனம்!

Google Oneindia Tamil News

மும்பை: ராமர் கோவில் கட்டினால் கொரோனா பாதிப்பு குணமாகிவிடும் என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Some people think that Ram temple will cure Coronavirus says Sharad Pawar

அயோத்தி வழக்கு முடிவடைந்து தீர்ப்பு வந்துள்ள நிலையில் இதுவரை நான்கு முறை அங்கு ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பணிகள் நடந்து வருகிறது. ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அமைப்பு சார்பாக இந்த பணிகள் நடக்கிறது .

ராமர் கோவிலுக்கான பூமி பூஜை ஆகஸ்ட் 5ம் தேதி நடக்க உள்ளது. இதில் மோடி கலந்து கொள்கிறார்.

இந்த நிலையில் ராமர் கோவில் கட்டினால் கொரோனா பாதிப்பு குணமாகிவிடும் என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். அவர் தனது விமர்சனத்தில் ராமர் கோவில் கட்டினால் கொரோனா பாதிப்பு குணமாகிவிடும். கொரோனா மாயமாக மறையும் என்று சிலர் நினைக்கிறார்கள்.

கொரோனா= டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்- திமுக இளைஞரணி சிறப்பு கூட்டத்தில் 21 தீர்மானங்கள்கொரோனா= டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்- திமுக இளைஞரணி சிறப்பு கூட்டத்தில் 21 தீர்மானங்கள்

அவர்கள் இதை திட்டமிட்டு செய்ய வாய்ப்பு உள்ளது. எனக்கு தெரியவில்லை. அவர்கள் கொரோனா பரவலை தடுக்கவும், மக்களுக்கு உதவவும் உழைக்க வேண்டும்.

என்னை பொறுத்தவரை கொரோனா வைரஸ்தான் தற்போது மக்களுக்கு பெரிய பிரச்சனை. மத்திய , மாநில அரசுகள் அதில்தான் கவனம் செலுத்த வேண்டும், என்று கூறியுள்ளார். சரத் பவாரின் இந்த கருத்து மஹாராஷ்டிரா அரசியலில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
Some people think that Ram temple will cure Coronavirus says Sharad Pawar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X