மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"உம்"முனு இருக்கும் நட்சத்திரங்களுக்கு மத்தியில் "ஜம்மு"னு ஜொலிக்கும் சோனு.. இவர்தான் சூப்பர் ஹீரோ!

Google Oneindia Tamil News

மும்பை: தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்த சோனு சூட் மக்களுக்கு மத்தியில் ரியல் ஹீரோவாக உயர்ந்து நிற்கிறார் என்றால் உச்சநட்சத்திரங்களுக்கு மத்தியில் அவர் செய்த மகத்தான பணியே காரணம்.

சினிமா நடிகர்கள் என்றால் வந்தோமா பணம் சேர்த்தோமா, நாலு ரசிகர்களுடன் நின்று போட்டோ எடுத்துக் கொண்டோமா, தன் பெயரில் ரசிகர் மன்றத்தை துவக்கி அதில் அவர்களது செலவில் நிவாரண பணிகளை மேற்கொண்டு பெயரை பெற்றோமா என இருந்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது.

அன்று ஒரு வேளை உணவுக்கே கஷ்டப்பட்ட எத்தனையோ பேர் இன்று திரைத்துறையில் நடிகர்களாகவும் நடிகைகளாகவும், பாடலாசிரியர்களாகவும், பின்னணி பாடகர்களாகவும், இயக்குநர், தயாரிப்பாளர்களாகவும் உயர்ந்துள்ளனர். இதற்கு காரணம் மக்கள் தங்கள் மனதில் அவர்களுக்கு கொடுத்த இடமே ஆகும்.

ஊரடங்கில் உதயமாகும் தலைவன்... துணிக்கடைக்காரர் மகனின் மனிதநேயம்... இது சோனு சூட் கதைஊரடங்கில் உதயமாகும் தலைவன்... துணிக்கடைக்காரர் மகனின் மனிதநேயம்... இது சோனு சூட் கதை

முன்னுக்கு வந்தவர்கள்

முன்னுக்கு வந்தவர்கள்

உண்மையில் இவர்களுக்கு மக்களின் வறுமை, துயரங்கள் என எல்லாம் தெரியும். அது போல் சிறுவயது முதலே கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர்தான் இந்தி நடிகர் சோனு சூட். இவர் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடா, பஞ்சாபி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக கால் சென்டர்களை அமைத்து அதன் மூலம் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார்.

விமானம்

விமானம்

மும்பையில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை தனது சொந்த பணத்தின் மூலம் தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். சயான்கோலிவாடா பகுதியில் சிக்கிய தமிழர்கள் சொந்த ஊர் திரும்ப வேண்டும் என சோனுவின் கால் சென்டருக்கு 18001213711 என்ற இலவச எண்ணுக்கு போன் போட்டு உதவி கேட்டனர். இதையடுத்து சோனு சூட் அப்பகுதியில் சிக்கியிருந்த 180 தமிழர்களை விமானம் மூலம் அனுப்பி வைக்க முயற்சித்தார்.

தேங்காய் உடைத்து

தேங்காய் உடைத்து

ஆனால் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து அவர்களை பேருந்து மூலம் தமிழகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். இதற்கான முதல் பேருந்து 5-ஆம் தேதி மாலை புறப்பட்டது. அப்போது சோனு சூட் தேங்காய் உடைத்து பஸ்ஸை அனுப்பி வைத்தார். இவர்கள் தமிழகத்திலிருந்து ஒரு சீசனுக்காக இட்லி விற்க சென்ற தமிழர்கள் மகாராஷ்டிராவில் சிக்கித் தவித்து வந்ததாக செய்திகள் வந்தன.

Recommended Video

    கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின்
    தமிழகம்

    தமிழகம்

    இவர்கள் வந்த இடத்தில் வியாபாரம் செய்ய முடியாமல் கொண்டு வந்த பணமெல்லாம் தீர்ந்து இன்று ஒரு வேளை உணவுக்கே பட்டினி கிடப்பதாக தெரிவித்தனர். தற்போது இவர்கள் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அனைத்து மொழிகளிலும் மக்களால் உயர்ந்த உச்ச நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் செய்யாததை இவர் செய்ததோடு இத்தனை நாட்களாக வில்லனாக இருந்த இவர் இன்று ரியல் ஹீரோவாக விஸ்வரூபம் எடுத்துள்ளார்.

    English summary
    Actor Sonu Sood is a real hero despite he has acted as villain in cinemas.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X