மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மும்பை ஆரே மரங்களை வெட்ட கூடாது.. தலைமை நீதிபதியை சந்திக்கும் போராட்டக்காரர்கள்.. அவசர முறையீடு!

மும்பை ஆரே காலனி பகுதியில் மரங்களை வெட்டுவதற்கு எதிராக போராட்டக்காரர்கள் தீவிரமாக போராடி வருகிறார்கள்.

Google Oneindia Tamil News

மும்பை: மும்பை ஆரே காலனி பகுதியில் மரங்களை வெட்டுவதற்கு எதிராக போராட்டக்காரர்கள் தீவிரமாக போராடி வருகிறார்கள். இவர்களின் குழு ஒன்று இன்று மதியம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயை சந்திக்க உள்ளனர்.

மும்பை ஆரே காலனி பகுதியில் மெட்ரோ நிலையத்திற்கான வாகன நிறுத்துமிடம் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதனால் அங்கு இருக்கும் 2700 மரங்களை மும்பை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதற்கு மக்கள் மற்றும் மாணவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு அம்மாநில அரசின் முடிவிற்கு எதிராக அவர்கள் மும்பை ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.

ஆனால் இல்லை

ஆனால் இல்லை

பல மாதங்களாக நடந்த இந்த வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ஆரே காலனி பகுதியில் மரங்களை வெட்டிக்கொள்ளலாம். மரங்களை வெட்ட தடை விதிக்க முடியாது என்று நீதிமன்றம் கூறியது. இதனால் அன்று இரவே மரங்களை வெட்டும் பணி தொடங்கியது.

போராட்டம் நடக்கிறது

போராட்டம் நடக்கிறது

நேற்று முழுக்க ஆரே காலனி பகுதியில் மரங்கள் வெட்டப்பட்டது. இன்று காலையும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இதற்கு எதிராக மாணவர்கள் போராடி வருகிறார்கள். இதுவரை போராட்டத்தில் ஈடுப்பட்ட 29 மாணவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த மாணவர்கள் மீது போலீஸ் கடுமையான தடியடி நடத்தி உள்ளது.

வேகமாக நடக்கிறது

வேகமாக நடக்கிறது

காலையில் இருந்து ஆரே காலனி பகுதியில் மரங்களை வெட்டும் பணி வேகமாக நடந்து வருகிறது. இன்று மாலைக்குள் அங்கு மரங்கள் மொத்தமாக வெட்டப்பட்டு விடும் என்கிறார்கள். இதற்காக அங்கு கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு துரிதமாக வேலை நடந்து வருகிறது.

எப்படி நடக்கிறது

எப்படி நடக்கிறது

இந்த நிலையில் போராட்டக்காரர்கள் தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயை சந்திக்க இருக்கிறார்கள். இன்று மாலை 3 மணிக்கு மாணவர்கள் குழு ஒன்று தலைமை நீதிபதியை சந்தித்து இது தொடர்பாக அவசரமாக விசாரிக்க கோரிக்கை வைக்க உள்ளனர்.

ஆரே காலனி பகுதி

ஆரே காலனி பகுதி

இன்று மாலைக்குள் எல்லா மரங்களும் அங்கு வெட்டப்பட்டுவிடும். கிட்டத்தட்ட 2900 மரங்கள் இன்று மாலைக்குள் வெட்டப்பட்டுவிடும். அதற்குள் வழக்கு தொடுத்து, அதை விசாரிக்க வைக்க முடியாது. அதனால் தற்போது மாணவர்கள் நேரடியாக தலைமை நீதிபதியை சந்திக்க உள்ளனர்.

English summary
Student delegation to meet CJI on Aarey tree case: Seeking stay on Axing off trees in Mumbai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X