மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மீண்டு(ம்) வந்த அண்ணன் அஜித்பவாரை கட்டி தழுவி வரவேற்ற சுப்ரியா சுலே.. பட்னவீஸுக்கும் உற்சாக வரவேற்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    மீண்டு(ம்) வந்த அண்ணன் அஜித்பவாரை கட்டி தழுவி வரவேற்ற சுப்ரியா சுலே

    மும்பை: மகாராஷ்டிரா சட்டசபையின் முதல் கூட்டத்திற்கு வருகை தந்த அண்ணன் அஜித்பவாரை சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே கட்டி அணைத்து வரவேற்றார். தேவேந்திர பட்னவீஸையும் அவர் வரவேற்றார்.

    மகாராஷ்டிராவில் நடந்த சட்டசபை தேர்தலில் முடிவுகள் வெளியான நிலையில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் ஆட்சியை பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் 105 இடங்களை பிடித்த பாஜகவிடம் முதல்வர் பதவியில் சுழற்சி முறையில் அளிக்க 56 இடங்களை பிடித்த சிவசேனை கோரியது.

    இதனால் பாஜக கூட்டணியிலிருந்து சிவசேனா வெளியேறியது. இதையடுத்து காங்கிரஸ்- என்சிபி கூட்டணியில் இணைந்து ஆட்சியை பிடிக்க சிவசேனா முயற்சித்து வந்தது. இதற்கான இறுதி கட்ட பேச்சுவார்த்தையும் சிறப்பாக முடிந்தது.

    மகா. உட்பட மாநிலங்களில் ஆட்சியை இழந்து வரும் பாஜக- ஆட்சி கவிழ்ப்பு, கட்சி வளைப்பு மட்டும் வியூகம்!மகா. உட்பட மாநிலங்களில் ஆட்சியை இழந்து வரும் பாஜக- ஆட்சி கவிழ்ப்பு, கட்சி வளைப்பு மட்டும் வியூகம்!

    அஜித்பவார்

    அஜித்பவார்

    இந்த நிலையில் ஒரு நாள் இரவில் மகாராஷ்டிராவில் புதிய திருப்பமாக என்சிபியின் அஜித் பவார் பாஜகவுடன் இணைந்து புதிய ஆட்சி உருவாக உதவினார். இதையடுத்து முதல்வராக தேவேந்திர பட்னவீஸும் துணை முதல்வராக அஜித் பவாரும் பதவியேற்றனர்.

    உச்சநீதிமன்றத்தில் வழக்கு

    உச்சநீதிமன்றத்தில் வழக்கு

    தனது பெரியப்பா பிள்ளையான அஜித்பவார் இது போன்ற துரோகம் இழைத்ததால் குடும்பத்திலும் கட்சியிலும் விரிசல் என தனது வாட்ஸ்ஆப் ஸ்டேடஸ்ஸில் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே குறிப்பிட்டிருந்தார். புதிய அரசை எதிர்த்து சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

    53 பேர் சரத்பவாருடன்

    இந்த நிலையில் 54 என்சிபி எம்எல்ஏக்களில் 53 பேர் சரத்பவாருடன் இருப்பதையும் தான் பாஜக அணியில் இருப்பதால் எந்தவித பயனும் இல்லை என்பதையும் உணர்ந்த அஜித் பவார் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனிடையே உச்சநீதிமன்ற வழக்கில் இன்று பாஜக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது.

    உரிமை கோரிய தாக்கரே

    உரிமை கோரிய தாக்கரே

    அஜித் பவாரை நம்பி இறங்கிய பாஜக எப்போது அவர் வெளியே போய்விட்டாரோ இனி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி அசிங்கப்பட வேண்டாம் என கருதி தேவேந்திர பட்னவீஸ் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் பாஜக அரசு கவிழ்ந்தது. இதையடுத்து சற்று தாமதிக்காமல் இரவு 9 மணிக்கு ஆளுநர் கோஷ்யாரியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் உத்தவ் தாக்கரே.

    288 எம்எல்ஏ

    288 எம்எல்ஏ

    அவர் நாளை பதவியேற்கும் நிலையில் தனக்கான பெரும்பான்மையை வரும் 3-ஆம் தேதிக்குள் நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் இன்று சட்டசபையின் முதல் கூட்டம் தொடங்குகிறது. இதில் 288 எம்எல்ஏக்களும் பதவிப்பிரமாணம் செய்து கொள்கின்றனர்.

    கை குலுக்கி வரவேற்பு

    கை குலுக்கி வரவேற்பு

    இதற்காக சட்டசபைக்கு வருகை தந்த அண்ணன் அஜித் பவாரை சுப்ரியா சுலே கட்டி அணைத்து வரவேற்றார். பின்னர் சட்டசபைக்கு வந்த தேவேந்திர பட்னவீஸுடன் கைகுலுக்கிய சுப்ரியா அவரையும் வரவேற்றார்.

    English summary
    NCP leaders Ajit Pawar & Supriya Sule arrive at the assembly, ahead of the first session of the new assembly today. Oath will be administered to the MLAs in the assembly today. Supriya Sule receives Ajit Pawar and Fadnavis.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X