மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சுஷாந்த் வழக்கு- மகா. போலீசுடனான மோதலில் உச்சம்- கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்ட பீகார் ஐபிஎஸ் அதிகாரி

Google Oneindia Tamil News

மும்பை: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு தொடர்பான விசாரணைக்கு வந்த பீகார் ஐ.பி.எஸ். அதிகாரி வினய் திவாரியை மும்பை மாநகராட்சி அதிகாரிகள் கட்டாயப்படுத்தி தனிமைப்படுத்தியதுடன் அவரது கையில் தனிமைப்படுத்தப்பட்டவர் என முத்திரை குத்தியது சர்ச்சையாகி உள்ளது.

டோணியின் வாழ்க்கை திரைப்படத்தில் நடித்து அசத்தியவர் சுஷாந்த் சிங். பீகாரை பூர்வீமாக கொண்ட சுஷாந்த் சிங் அண்மையில் மும்பையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ரபேலை வைத்து சீனாவை அதிர வைக்கலாம்.. மாஜி விமானப்படை அதிகாரி தரும் குட் நியூஸ் ரபேலை வைத்து சீனாவை அதிர வைக்கலாம்.. மாஜி விமானப்படை அதிகாரி தரும் குட் நியூஸ்

சுஷாந்த்சிங் மரணம்- சு.சுவாமி கருத்து

சுஷாந்த்சிங் மரணம்- சு.சுவாமி கருத்து

சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக மும்பை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். சுஷாந்த் சிங் மரணம் கொலை என பாஜகவை சேர்ந்த ராஜ்யசபா எம்பி சுப்பிரமணியன் சுவாமி கூறியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகை மீது புதிய புகார்

நடிகை மீது புதிய புகார்

இந்த நிலையில் சுஷாந்த்சிங்கின் தந்தை பீகார் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், மகனின் தற்கொலைக்கு மாஜி காதலியான நடிகை ரியாதான் காரணம் என கூறியிருந்தார். இதனையடுத்து பாட்னா போலீசார் நடிகை ரியா மீது வழக்கு பதிவு செய்தது.

கட்டாய தனிமைப்படுத்துதல்

கட்டாய தனிமைப்படுத்துதல்

இந்த நிலையில் பீகார் ஐ.பி.எஸ். அதிகாரியான வினய் திவாரி தலைமையிலான ஒரு குழு சுஷாந்த் வழக்கு விசாரணைக்காக மும்பை வந்தது. ஆனால் மும்பை மாநகராட்சி அதிகாரிகளோ, வினய் திவாரியை கட்டாயப்படுத்தி தனிமைப்படுத்தி உள்ளனர். அத்துடன் தனிமைப்படுப்படுத்தப்பட்ட நபர் என அவர் கையில் முத்திரையும் குத்தி இருக்கின்றனர்.

இரு மாநில பிரச்சனை

இரு மாநில பிரச்சனை

இந்த விவரங்களை பீகார் டிஜிபி குப்தேஸ்வர் பாண்டே தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே சுஷாந்த் வழக்கு விசாரணையில் தங்களுக்கு மகாராஷ்டிரா போலீசார் உரிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று பீகார் துணை முதல்வர் சுஷில் மோடி குற்றம்சாட்டியிருந்தார். அத்துடன் சுஷாந்த்சிங் தந்தை விரும்பினால் சிபிஐ விசாரணைக்கு நடவடிக்கை எடுப்போம் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா மீது மத்திய அமைச்சர் புகார்

மகாராஷ்டிரா மீது மத்திய அமைச்சர் புகார்

அதேபோல் சுஷாந்த்சிங் வழக்கில் மகாராஷ்டிரா அரசு எதுவுமே செய்யவில்லை. என்ன விசாரிக்கிறார்கள்? யாரிடம் விசாரிக்கிரார்கள்? என தெரியவில்லை. வெறும் பரபரப்பு செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன என்று மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில் தற்போது பீகாரில் இருந்து விசாரணைக்கு வந்த ஐபிஎஸ் அதிகாரியை மும்பை அதிகாரிகள் கட்டாயப்படுத்தி தனிமைக்குள்ளாக்கி வைத்திருப்பது இருமாநிலங்களிடையேயான பிரச்சனையை விஸ்வரூபமாக்கி உள்ளது.

English summary
Bihar DGP Gupteshwar Pandey on charged that IPS officer Vinay Tiwari has been forcibly quarantined by Mumbai civic authorities.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X