மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சுஷாந்த் சிங்கின் மரணம் தற்கொலைதான்.. கொலை என்ற பேச்சுக்கே இடம் இல்லை.. எய்ம்ஸ் மருத்துவர்

Google Oneindia Tamil News

மும்பை: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் முற்றிலும் தற்கொலை என்றும் கொலை என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்றும் அவரது பிரேத பரிசோதனை அறிக்கைகளை மறுஆய்வு செய்த எய்ம்ஸ் மருத்துவக் குழுவின் தலைவர் டாக்டர் சுதீர் குப்தா தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது சாவில் மர்மம் இருப்பதாக அவரது தந்தை புகார் அளித்துள்ளார். மேலும் சுஷாந்தின் காதலி ரியா சக்ரவர்த்தி, அவருக்கு உணவிலும், தண்ணீரிலும் போதை மருந்தை கலந்து கொடுத்ததாக சுஷாந்தின் தந்தை குற்றம்சாட்டினார்.

நான் அப்படி சொல்லவே இல்லை.. ஊடகங்கள் தவறாக திரித்துவிட்டன.. அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்நான் அப்படி சொல்லவே இல்லை.. ஊடகங்கள் தவறாக திரித்துவிட்டன.. அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

வழக்கறிஞர்

வழக்கறிஞர்

இந்த வழக்கு குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. எய்ம்ஸ் மருத்துவர் அறிக்கையின்படி சுஷாந்தின் கழுத்தை 200 சதவீதம் நெரித்ததால்தான் அவருக்கு மரணம் ஏற்பட்டதாக சுஷாந்த் சிங்கின் வழக்கறிஞர் விகாஸ் சிங் தெரிவித்திருந்தார்.

கழுத்து நெரிப்பு

கழுத்து நெரிப்பு

சுஷாந்த் சிங்கின் மரணத்தை தற்கொலையிலிருந்து கொலையாக மாற்றுவதில் சிபிஐ காலம் தாழ்த்தி வருவதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை குழுவில் அங்கம் வகிக்கும் மருத்துவர், சுஷாந்த் இறப்பு குறித்த புகைப்படங்களை பார்த்ததும் இதெல்லாம் கழுத்தை நெரிப்பதால் ஏற்பட்ட காயங்கள் என கூறியிருந்தார் என்றார் விகாஸ்.

பிரேத பரிசோதனை

பிரேத பரிசோதனை

இந்த நிலையில் சுஷாந்த் சிங்கின் போஸ்ட் மார்டெம் அறிக்கையை எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் மறு ஆய்வு செய்தனர். அது போல் சுஷாந்தின் லேப்டாப், இரு ஹார்ட் டிஸ்க்குகள், கேனான் கேமரா, இரு மொபைல் போன்கள் உள்ளிட்டவற்றை தடயவியல் துறையினர் ஆய்வு செய்துள்ளனர். தடயங்கள் மூலம் எய்ம்ஸ் மருத்துவக் குழு கண்டறிந்ததை சிபிஐக்கு கடந்த செப்டம்பர் 29-ஆம் தேதி சமர்பித்தனர்.

சுஷாந்த் கொலை அல்ல

சுஷாந்த் கொலை அல்ல

அந்த அறிக்கையின்படி சுஷாந்தின் மரணம் கொலை அல்ல என்றும் தற்கொலை என்றும் எய்ம்ஸ் மருத்துவக் குழு மருத்துவர் சுதீர் குப்தா தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் கழுத்தில் இருக்கும் அடையாளங்களை வைத்து நாம் மேம்போக்காக இது மரணம், தற்கொலை என முடிவுக்கு வந்துவிடக் கூடாது. விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டும். அதற்குள் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என மருத்துவர் சுதீர் தெரிவித்தார்.

English summary
Sushant Singh Rajput death was not a murder and its all suicide, says AIIMS Doctor Sudhir Gupta.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X