மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பீகார் அரசியல் குடும்பம்- சுஷாந்த்சிங் ராஜ்புத் அண்ணன் 3 முறை எம்.எல்.ஏ.- அண்ணி அதிரடி எம்.எல்.சி

Google Oneindia Tamil News

மும்பை: 34 வயதில் தற்கொலை செய்து கொண்டு திரை உலகத்தை அதிர்ச்சி அடைய வைத்திருக்கும் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத், பீகாரின் அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது சகோதரர் பீகாரில் 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். அவரது அண்ணியார் பீகார் எம்.எல்.சி.யாக இருப்பவர்.

Recommended Video

    பிரபல பாலிவுட் நடிகர் Sushant Singh Rajput தற்கொலை

    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்தர் சுஷாந்த்சிங் ராஜ்புத். தோனியின் வாழ்க்கையை அச்சு அசலாக இயல்பாகவே நடித்து பெரும் பாராட்டைப் பெற்றார் சுஷாந்த்.

    மர்மம்.. மாடியிலிருந்து விழுந்து பெண் மேனஜர் தற்கொலை.. மறுவாரமே சுஷாந்த்சிங் தற்கொலை.. என்ன நடந்தது?மர்மம்.. மாடியிலிருந்து விழுந்து பெண் மேனஜர் தற்கொலை.. மறுவாரமே சுஷாந்த்சிங் தற்கொலை.. என்ன நடந்தது?

    6 மாதங்களாக மன அழுத்தம்

    6 மாதங்களாக மன அழுத்தம்

    கடந்த சில மாதங்களாக சுஷாந்த்சிங் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்னர்தான் அவரது பெண் மேனேஜர் தற்கொலை செய்து கொண்டார்.இந்நிலையில் சுஷாந்த்சிங் இன்று மும்பையில் அவரது வீட்டில் தூக்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அரசியல் குடும்பத்தில் பிறந்தவர்

    அரசியல் குடும்பத்தில் பிறந்தவர்

    சுஷாந்த்சிங் சனிக்கிழமை இரவு தமது நண்பர்களுக்கு விருந்து அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவரது நண்பர்கள் இன்னமும் இதை உறுதிப்படுத்தவில்லை. ராஜ்புத்தின் பூர்வீகம் பீகார். பீகாரில் செல்வாக்குமிக்க அரசியல் குடும்பத்தில் பிறந்தவர் சுஷாந்த் சிங்.

    அண்ணன் எம்.எல்.ஏ.

    அண்ணன் எம்.எல்.ஏ.

    பீகாரின் மோகமா சட்டசபை தொகுதியில் சுஷாந்த்சிங்கின் சகோதரர் நீரஜ் குமார் சிங் பாப்லு, 2005, 2010 மற்றும் 2015 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு ஹாட்ரிக் வெற்றி பெற்றவர். ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் நீரஜ்குமார். பின்னர் பாஜகவில் 12 அதிருப்தி எம்.எல்.ஏக்களுடன் இணைந்தவர் நீரஜ்குமார்.

    பீகார் எம்.எல்.சி.

    பீகார் எம்.எல்.சி.

    நீரஜ்குமாரின் மனைவியான சஷாந்த்சிங்கின் அண்ணி, பீகார் சட்ட மேலவை உறுப்பினர். ராம்விலாஸ் பஸ்வானின் எல்.ஜே.பியின் எம்.எல்.சி. இவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பீகார் மாநில பாஜக துணை தலைவராக இருந்த லால் பாபுவை நீரஜ்குமார் அடித்து துவைத்த சம்பவம் 2017-ல் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சுஷாந்த்சிங், 16 வயதாக இருந்த போது அவரது தாயார் 2002-ல் காலமானார். அவரது தந்தை டாக்டர் கே.கே.சிங், 2 சகோதரிகள், சகோதரர்கள் உள்ளனர்.

    English summary
    Sushant Singh Rajput was born in Patna. His brother Neeraj Kumar Bablu is an MLA. His sister-in-law is an MLC in the Bihar Legislative Council.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X