மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதை குற்றம் என்று சொன்னால் திரும்பவும் செய்வோம்.. முதல்வராக முதல் உரையிலேயே பட்னாவிசை விளாசிய உத்தவ்

Google Oneindia Tamil News

Recommended Video

    Maharashtra Floor Test Updates : சிவசேனா கூட்டணி அதிரடி.. 169 எம்எல்ஏக்கள் ஆதரவு !

    மும்பை: முதல்வராக பதவியேற்றதுமே, சத்ரபதி சிவாஜி பெயரை பயன்படுத்தி, தேவேந்திர பட்னாவிசுக்கு பதிலடி கொடுத்தார் உத்தவ் தாக்ரே.

    சட்டசபையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு, மகாராஷ்டிரா பாரம்பரிய தொப்பி அணிந்து வந்திருந்தார் உத்தவ் தாக்ரே. நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றதும், உத்தவ் தாக்ரே பேசியதாவது: சத்ரபதி சிவாஜியின் பெயரில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டதை பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.

    சிவாஜி இந்த நாட்டுக்கே உரியவர் என்றாலும், அவர் மகாராஷ்டிரா மண்ணின் மகன். நாங்கள் எல்லோருமே, சத்ரபதி சிவாஜி வழி வந்த பிள்ளைகள்.

     மகாராஷ்டிரா நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் வெற்றி.. சிவசேனா கூட்டணி அதிரடி.. 169 எம்எல்ஏக்கள் ஆதரவு மகாராஷ்டிரா நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் வெற்றி.. சிவசேனா கூட்டணி அதிரடி.. 169 எம்எல்ஏக்கள் ஆதரவு

    குற்றம் இல்லை

    தந்தையின் பெயரில் பிள்ளைகள் பதவிப்பிரமாணம் செய்து கொள்வதில் தவறு கிடையாது. அதேபோல, சிவாஜியின் பெயரில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டது குற்ற செயலா? அது குற்றம் என்றால் நாங்கள் மீண்டும், மீண்டும் அதையே செய்வோம். இவ்வாறு உத்தவ் தாக்ரே கூறினார்.

    பட்னாவிஸ் பேட்டி

    முன்னதாக நிருபர்களிடம் பேட்டி அளித்த, முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ், அரசியல் சாசனத்தின் பெயரால் ஆளுங்கட்சியினர் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ளவில்லை. சத்ரபதி சிவாஜி, பால்தாக்கரே, சோனியா காந்தி உள்ளிட்டோரின் பெயர்களில், எல்லாம் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டுள்ளனர். இது செல்லாது என்று தெரிவித்தார்.

    பட்னாவிஸ் பேட்டி

    பட்னாவிஸ் பேட்டி

    முன்னதாக நிருபர்களிடம் பேட்டி அளித்த, முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ், அரசியல் சாசனத்தின் பெயரால் ஆளுங்கட்சியினர் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ளவில்லை. சத்ரபதி சிவாஜி, பால்தாக்கரே, சோனியா காந்தி உள்ளிட்டோரின் பெயர்களில், எல்லாம் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டுள்ளனர். இது செல்லாது என்று தெரிவித்தார்.

    செல்லாது, செல்லாது

    செல்லாது, செல்லாது

    மேலும் சட்டசபையில் வந்தே மாதரம் இசைக்கப்படவில்லை, எனவே இந்த அவை கூடியது செல்லாது என்றும் பட்னாவிஸ் தெரிவித்தார். இவ்வாறு அவை கூட்டத்தையே செல்லாது என தொடர்ந்து கூறியபடி இருந்தார் பட்னாவிஸ். இதற்கு பதிலளிக்கும் விதமாக, உத்தவ் தாக்கரே இவ்வாறு ஒரு கருத்தை பதிவுசெய்தார்.

    உத்தவ் தாக்ரே அரசு வெற்றி

    உத்தவ் தாக்ரே அரசு வெற்றி

    குறைந்தது, 145 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், இன்று, சட்ட சபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே, 169 எம்எல்ஏக்கள் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். முதல்வராக வெற்றி பெற்ற பிறகு தனது முதல் உரையில், இவ்வாறு சத்ரபதிசிவாஜி குறித்து பேசினார் உத்தவ் தாக்கரே என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Maharashtra Chief Minister Uddhav Thackeray in assembly: Yes I took oath in name of Chhatrapati Shivaji Maharaj and also in name of my parents. If this is an offence then I will do it again.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X