மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பால்தாக்கரே கொள்கையை காற்றில் பறக்கவிட்ட பேரன்... மராட்டிய சிங்கத்திற்கு வந்த சோதனை

Google Oneindia Tamil News

Recommended Video

    பால்தாக்கரே கொள்கையை காற்றில் பறக்கவிட்ட பேரன்-வீடியோ

    இந்நிலையில் இன்று காலை வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு, வீட்டில் உள்ள பால்தாக்கரே அறைக்கு சென்ற ஆதித்யா தாக்கரே சுமார் 15 நிமிடம் வரை தனது தாத்தாவின் கட்டிலில் தலைவணங்கி பிரார்த்தனை செய்துள்ளார். மேலும், மகனை ஆசிர்வதிக்க வேண்டும் என பால்தாக்கரே படத்தின் முன்பு நின்று உத்தவ்தாக்கரே கண்ணீர்மல்க வேண்டியுள்ளார். மும்பை: மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரேவின் கொள்கைகளை பேரன் ஆதித்யா தாக்கரே காற்றில் பறக்கவிட்டு விட்டு, மஹாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே மராட்டிய சிங்கம் என்றழைக்கப்பட்டவர். மராட்டியர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளாக ஆதரவுக்குரல் கொடுப்பதுடன் களத்தில் இறங்கி பக்கபலமாகவும் இருந்தவர். இப்படி பொதுவாழ்வில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உண்டாக்கிய பால்தாக்கரே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானார்.

    The grandson adiyta thackeray is working against the Bal thackeray policy

    பால்தாக்கரே உயிருடன் இருந்தபோது அவர் மேடைக்கு மேடை முழங்கியது, நானோ எனது வாரிசுகளோ எந்தக்காலத்திலும் தேர்தலில் போட்டியிடமாட்டோம், அரசுப்பதவிகளுக்கு வர மாட்டோம் என்பது தான். ஆனால் இன்று அவர் கொள்கையை மங்கச்செய்து தேர்தலில் போட்டியிடுவது வேறுயாருமல்ல அவரின் சொந்தப்பேரன் ஆதித்யா தாக்கரே தான்.

    கர்நாடகாவில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல் குறித்து மத்திய அரசுடன் ஆலோசனைகர்நாடகாவில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல் குறித்து மத்திய அரசுடன் ஆலோசனை

    பால்தாக்கரே உயிரோடு இருந்திருந்தால் ஆதித்யா தாக்கரேவின் இந்த முடிவை ஒரு போதும் அனுமதித்து இருக்கமாட்டார் என்றும், உத்தவ்தாக்கரே மகன் மீது வைத்துள்ள பாசத்தால் தந்தையின் புகழுக்கு இழுக்கு ஏற்படும் வகையில் செயல்படுகிறாரோ என்ற நெருடல் உள்ளதாக வெம்புகின்றனர் சிவசேனா அனுதாபிகள்.

    இந்நிலையில் இன்று காலை வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு, வீட்டில் உள்ள பால்தாக்கரே அறைக்கு சென்ற ஆதித்யா தாக்கரே சுமார் 15 நிமிடம் வரை தனது தாத்தாவின் கட்டிலில் தலைவணங்கி பிரார்த்தனை செய்துள்ளார். மேலும், மகனை ஆசிர்வதிக்க வேண்டும் என பால்தாக்கரே படத்தின் முன்பு நின்று உத்தவ்தாக்கரே கண்ணீர்மல்க வேண்டியுள்ளார்.

    English summary
    The grandson adiyta thackeray is working against the Bal thackeray policy
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X