• search
மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

லிப் டூ லிப் முத்தமும் ‘அங்கே’ தொடுவதும் குற்றம் இல்லை..! பரபரப்பு தீர்ப்பளித்த மும்பை நீதிமன்றம்.!

Google Oneindia Tamil News

மும்பை : உதடுகளில் முத்தமிடுவதும், பாசமாக கட்டிப் பிடிப்பதும் இயற்கைக்கு மாறான குற்றங்கள் அல்ல என்று தீர்ப்பளித்துள்ள மும்பை உயர் நீதிமன்றம், மைனர் சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் செல்போனில் ஆன்லைனில் விளையாடும் 'ஓலா பார்ட்டி' என்ற ஆன்லைன் கேமை ரீசார்ஜ் செய்வதற்காக, மும்பையின் புறநகர் பகுதியில் உள்ள கடைக்கு அடிக்கடி சென்றுள்ளான்.

210 சவரன் போலி நகைகள்... சென்னை வங்கியில் ரூ.32 லட்சம் மோசடி - 4 ஆண்டுக்கு பின் சிக்கிய பலே கும்பல் 210 சவரன் போலி நகைகள்... சென்னை வங்கியில் ரூ.32 லட்சம் மோசடி - 4 ஆண்டுக்கு பின் சிக்கிய பலே கும்பல்

இந்நிலையில் சிறுவனின் தந்தை தங்கள் வீட்டில் இருந்து அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாக பணத்தைக் காணாததால் சிறுவனிடம் அது குறித்து விசாரித்துள்ளார்.

சிறுவன் பலாத்காரம்

சிறுவன் பலாத்காரம்

இதையடுத்து சிறுவனிடம் விசாரித்த போது ஆன்லைன் சிறுவன் ஆன்லைனில் ஓலா கேம் விளையாடி இருக்கிறான். அதில் அதிக அளவில் பணத்தை இழந்துவிட்டதும், உடனே தனது வீட்டிலிருந்து பணத்தை எடுத்துச்சென்று அப்பகுதியில் முக்தார் என்பவரிடம் கொடுத்து மொபைல் ஆப்-ல் ரீசார்ஜ் செய்யும் படி கேட்டுக்கொண்டதும் தெரிய வந்தது. அப்போது தன்னை முக்தார் தனி அறைக்கு அழைத்துச் சென்று உதட்டில் முத்தம் கொடுத்ததோடு, அந்தரங்க உறுப்புகளை தொட்டதாகக் கூறியுள்ளான்.

இளைஞர் கைது

இளைஞர் கைது

வீட்டில் பணத்தை காணவில்லை என்று கூறி அவர் பெற்றோர் சிறுவனிடம் விசாரித்த போதுதான், சிறுவன் ரீசார்ஜ் செய்ய சென்ற இடத்தில் முக்தார் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனின் தந்தை முக்தார் மீது போலீஸில் புகார் செய்தார். இதனையடுத்து கடந்த ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி முக்தார் கைது செய்யப்பட்ட நிலையில், ஒரு ஆண்டுக்கும் மேலாக சிறையில் இருக்கும் அவர் மீது 377-வது சட்டப்பிரிவு மற்றும் சிறுவர் பாலியல் குற்றத்தடுப்புச் சட்டத்தின் 8 மற்றும் 12-வது பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மும்பை உயர்நீதிமன்றம்

மும்பை உயர்நீதிமன்றம்

மேலும் 377வது சட்டப்பிரிவு இயற்கைக்கு மாறான பாலியல் குற்றத்திற்காகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஐபிசி பிரிவு 377ன் படி வழக்குப் பதிவு செய்யப்பட்டால் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை கிடைக்கும் என்பதோடு ஜாமீன் கிடைப்பது கடினம். இந்நிலையில் ஒரு ஆண்டுக்கும் மேலாக சிறையில் இருக்கும் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி முக்தார் மும்பை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பிரபுதேசாய் முன்பு விசாரணைக்கு வந்தது.

முத்தமிடுவது குற்றமில்லை

முத்தமிடுவது குற்றமில்லை

விசாரணையின் போது 377வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது தவறு என முக்தார் தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது வழக்கு குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி . " பாதிக்கப்பட்ட சிறுவனின் வாக்குமூலம் மற்றும் முதல் தகவல் அறிக்கையை ஆய்வு செய்ததில், சிறுவனின் மர்ம உறுப்பை மனுதாரர் தொட்டிருக்கிறார். அதோடு உதட்டில் முத்தம் கொடுத்திருக்கிறார். ஆனால் இதில் 377வது சட்டப்பிரிவை இதில் பயன்படுத்த எந்த வித முகாந்திரமும் இல்லை. கட்டிப்பிடிப்பது மற்றும் முத்தம் கொடுப்பது இயற்கைக்கு மாறான பாலியல் குற்றமாக கருதமுடியாது" எனக் கூறினார்.

குற்றவாளிக்கு ஜாமீன்

குற்றவாளிக்கு ஜாமீன்

மேலும்," ​​சிறுவனுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது நிரூபிக்கப்படவில்லை, தற்போதைய வழக்கில், இயற்கைக்கு மாறான உடலுறவு என்பது முதன்மையான பார்வைக்கு பொருந்தாது, குற்றம் சாட்டப்பட்டவர் ஏற்கனவே ஒரு வருடமாக காவலில் இருப்பதாகவும், வழக்கின் விசாரணை விரைவில் தொடங்க வாய்ப்பில்லை" என்ற நீதிபதி, மேற்கண்ட உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, மனுதாரருக்கு ஜாமீன் பெற உரிமை உண்டு என்று கூறிய உயர் நீதிமன்ற நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

English summary
The Mumbai High Court has ruled that kissing and kissing on the lips are not unnatural offenses and has granted bail to a man accused of sexually abusing a minor boy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X