மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சட்டத்துக்கு தீங்கு விளைவிப்பதா... கங்கனா சொகுசு பங்களா இடிப்பு வழக்கில் கோர்ட் தீர்ப்பு!

Google Oneindia Tamil News

மும்பை: விதிகளை மீறி கட்டப்பட்டதாக கூறி நடிகை கங்கனா ரணாவத்தின் சொகுசு பங்களா ஒரு பகுதியை மும்பை மாநகராட்சி இடித்து தள்ளியது.

இது சட்டவிரோதமான செயல் என்று மும்பை ஐகோர்ட்டு இன்று தீர்ப்பளித்தது. கங்கனா ரணாவத்துக்கு நஷ்டஈடு வழங்குவது குறித்து ஆய்வு செய்வதற்காக ஒரு மதிப்பீட்டாளரையும் கோர்ட்டு நியமித்துள்ளது.

The Mumbai High Court rules in the case of demolition of Kangana Ranauts luxury bungalow

பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத்தின் சொகுசு பங்களா மும்பை பாலி ஹில் பகுதியில் உள்ளது. இந்த பங்களாவில் உள்ள அவரது அலுவலகத்தின் சில பகுதிகள் விதிகளை மீறி கட்டபட்டதாக கூறி கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி கட்டடத்தின் ஒரு பகுதியை மும்பை மாநகராட்சி இடித்து தள்ளியது.

அதன்பின்பு ரணாவத்துக்கும், மகாராஷ்டிரா அரசுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. சட்டவிரோதமாக தனது பங்களாவை இடித்து விட்டதாக ரணாவத் குற்றம் சாட்டியிருந்தார்.

புரேவிக்கு அடுத்து வங்க கடலில் உருவாகும் மற்றொரு புயல்?.. என்ன பெயர்?.. கைவசம் 25 ஆண்டுக்கு இருக்கே!புரேவிக்கு அடுத்து வங்க கடலில் உருவாகும் மற்றொரு புயல்?.. என்ன பெயர்?.. கைவசம் 25 ஆண்டுக்கு இருக்கே!

இது தொடர்பாக அவர் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான விசாரணை ஏற்கனவே நடைபெற்றபொது, சட்டவிரோதமாக கட்டப்பட்டதால்தான் அந்த கட்டிடம் இடிக்கப்பட்டதாக மும்பை மாநகராட்சி கோர்ட்டில் தெரிவித்தது. நடிகை கங்கனா ரணாவத்தின் தரப்பும் தங்கள் தரப்பு வாதத்தை எடுத்தது கூறியது.இரு தரப்பு விசாரணையும் கேட்ட கோர்ட்டு இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்படும் என ஏற்கெனவே கூறி இருந்தது.

அதன்படி இன்று தீர்ப்பு கூறிய நீதிபதிகள் எஸ்.ஜே. கதவல்லா மற்றும் ஆர்.ஐ.சக்லா ஆகியோர் மும்பை மாநகராட்சி சட்டத்தின் விதிகளை மீறி நடிகைக்கு சொந்தமான கட்டிடத்தை இடித்துள்ளது. இது குடிமக்களின் உரிமையை பறிப்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை என அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

The Mumbai High Court rules in the case of demolition of Kangana Ranauts luxury bungalow

மும்பை மாநகராட்சி சட்டவிரோதமாக கட்டிடத்தை இடித்துள்ளதால் 2கோடி ரூபாய் இழப்பீடு தர உத்தரவிட வேண்டும் என கங்கனா ரணாவத் கோர்ட்டில் தெரிவித்தார். இந்த இழப்பீடுகள் குறித்து ஆய்வு செய்ய மதிப்பீட்டாளர் ஒருவரை நியமிப்பதாகவும், அவர் 2021-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இது தொடர்பான ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

கங்கனா ரணாவத் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ளார். இதுகுறித்து கூறிய அவர், "இது தனிநபரின் வெற்றி அல்ல, ஜனநாயகத்தின் வெற்றி. எனக்கு உத்வேகம் அளித்த அனைவருக்கும் நன்றி என்றார்.

English summary
The Mumbai High Court has ruled that Kangana Ranaut's luxury bungalow was demolished by the Mumbai Corporation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X