மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இது எனது இந்தியா கிடையாது.. சாத்தான்குளம் விவகாரம் பற்றி ஆனந்த் மஹிந்திரா கருத்து

Google Oneindia Tamil News

மும்பை: சாத்தான்குளம் தந்தை, மகன் சாவு விவகாரத்தில் விரைவான, வெளிப்படையான விசாரணை நடத்தி நீதி பெற்று தரப்படவேண்டும் என்று மஹிந்திரா நிறுவன சேர்மன் ஆனந்த் மஹிந்திரா வலியுறுத்தியுள்ளார்.

சாத்தான்குளம் ஊரைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் போலீசாரால் அடித்து துன்புறுத்தப்பட்டதாகவும், இதையடுத்துதான், கோவில்பட்டி கிளை சிறைச்சாலையில் உடல்நிலை மோசமடைந்து அடுத்தடுத்து மரணமடைந்தனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக ஆங்கில செய்தி ஒன்றை ரீட்வீட் செய்துள்ளார் ஆனந்த் மஹிந்திரா.

குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.. அதிகார அத்துமீறல் முடிவுக்கு வர வேண்டும்- சூர்யா ஆவேச அறிக்கைகுற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.. அதிகார அத்துமீறல் முடிவுக்கு வர வேண்டும்- சூர்யா ஆவேச அறிக்கை

ஆனந்த் மஹிந்திரா

ஆனந்த் மஹிந்திரா

அதில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதை பாருங்கள்: இது எனது இந்தியா கிடையாது. இதுபோன்ற சூழ்நிலையை கையாளுவதற்கு ஒரேவழி, விரைவான, வெளிப்படையான, நியாயமான விசாரணை மற்றும் அதற்கு ஈடாக வேகமான நீதி ஆகிய இரண்டும்தான் ஆகும். இவ்வாறு ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.

முதல்வருக்கு டேக்

முதல்வருக்கு டேக்

மேலும் தனது ட்விட்டர் பதிவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் டுவிட்டர் அக்கவுண்டை அவர் டேக் செய்துள்ளார். அதாவது, நேரடியாகவே, முதல்வரிடம், ஆனந்த் மஹிந்திரா தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

பல நட்சத்திரங்கள்

பல நட்சத்திரங்கள்

முன்னதாக, ஹிந்தி திரையுலகின் பல நட்சத்திரங்கள், தமிழக திரையுலகில் நட்சத்திரங்கள் பலரும் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக தங்களது கண்டனத்தை பதிவு செய்ததோடு குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Recommended Video

    Sathankulam Incident : Rajinikanth ஏன் பேசாமல் இருக்கிறார்?
    கிரிக்கெட் வீரர்கள்

    கிரிக்கெட் வீரர்கள்

    இதேபோல, ஷிகர் தவான், அஸ்வின் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் இக்கோரிக்கையை வலியுறுத்தி உள்ளனர். அமெரிக்காவில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட், போலீசாரால் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்திற்கு ஈடாக சாத்தான்குளம் சம்பவத்தை பலரும் ஒப்பிட்டு வேதனை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    This is not my India. The only way to handle this is through a swift, fair, transparent investigation & the equally swift delivery of justice, says Anand Mahindra.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X