மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

4 கட்சிகள்.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. மாஸ் திருப்பத்திற்காக காத்திருக்கும் மகாராஷ்டிரா!

மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் சிவசேனா பாஜக கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. திருப்பத்திற்காக காத்திருக்கும் மகாராஷ்டிரா!

    மும்பை: மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் சிவசேனா பாஜக கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    சட்டசபை தேர்தலில் வென்றவுடன் மகாராஷ்டிராவில் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் சிவசேனா தங்களுக்கு முதல்வர் பதவி வேண்டும் என்று உறுதியாக கூறிவிட்டது.

    இதனால் பொறுத்திருந்து பார்த்த சிவசேனா, பின், எங்களால் ஆட்சி அமைக்க முடியாது. சிவசேனா எங்களுக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறிவிட்டது.

    புத்தம் புதிய டீல்.. மீண்டும் சேர்கிறதா பாஜக - சிவசேனா கூட்டணி?.. செம தீர்வு சொன்ன ராம்தாஸ் அத்வாலேபுத்தம் புதிய டீல்.. மீண்டும் சேர்கிறதா பாஜக - சிவசேனா கூட்டணி?.. செம தீர்வு சொன்ன ராம்தாஸ் அத்வாலே

    ஆட்சி இல்லை

    ஆட்சி இல்லை

    இதனால் மகாராஷ்டிராவில் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் திடீர் என்று தற்போது மகாராஷ்டிராவில் அதிரடி திருப்பங்கள் நடக்க தொடங்கி உள்ளது. கடந்த ஒரு வாரமாக மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

    ஆனால் இல்லை

    ஆனால் இல்லை

    ஆனால் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் பாயிண்ட் வரட்டும் பாயிண்ட் வரட்டும் என்றுதான் கடைசி வரை காத்து இருந்தது. உறுதியாக இரண்டு கட்சிகளுமே எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. கூட்டணி வைக்கலாமா, வேண்டாமா என்று எந்த விதமான முடிவையும் அறிவிக்கவில்லை.

    ஆலோசனை செய்தனர்

    ஆலோசனை செய்தனர்

    இதையடுத்து இந்த அரசியல் பிரச்சனை நேற்றோடு முடியும் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். நேற்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் காங்கிரஸ் தேசிய பொறுப்பு தலைவர் சோனியா காந்தி இருவரும் சந்தித்தனர். இவர்கள் நீண்ட நேரம் ஆலோசனை செய்தனர்.

    முடிவு இல்லை

    முடிவு இல்லை

    ஆனால் இதிலும் எந்த விதமான முடிவும் எடுக்கப்படவில்லை. இப்போதைக்கு கூட்டணி வைக்க முடியாது. பேசி வருகிறோம். ஆலோசித்துவிட்டு முடிவு செய்வோம். உடனே முடிவு எடுக்க முடியாது என்று தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூறிவிட்டது.

    மீண்டும் பாஜக

    மீண்டும் பாஜக

    இதனால் சிவசேனா மீண்டும் பாஜக பக்கம் தனது பார்வையை திருப்பி உள்ளது. அதன்படி 5 வருடத்தில் 2 வருடம் முதல்வர் இருந்தால் போதும் என்று சிவசேனா இறங்கி வந்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இரண்டும் சரியான பதிலை தெரிவிக்காத காரணத்தால் சிவசேனா இந்த முடிவை எடுத்துள்ளது என்கிறார்கள்.

    ஆட்சி வாய்ப்பு

    ஆட்சி வாய்ப்பு

    ஆம் , விரைவில் மகாராஷ்டிராவில் சிவசேனா - பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது. இதற்கான ஆலோசனைகள் நடந்து வருகிறது. திரை மறைவில் விரைவில் முடிவு எடுக்கப்படும். மகாராஷ்டிராவில் யாரும் எதிர்பார்க்காத திருப்பங்கள் நடக்கும் என்று கூறுகிறார்கள் .

    என்ன பதிலடி

    என்ன பதிலடி

    ஆனால் இதற்கு தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் எப்படி பதிலடி கொடுக்கும். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் எப்படி பதிலடி கொடுப்பார். அவர் தன்னுடைய அனுபவம் மூலம் எப்படி இதற்கு எதிராக காய் நகர்த்துவார் என்று கேள்வி எழுந்துள்ளது.

    English summary
    Tides are changing again in the State : What is happening is Maharashtra actually?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X