மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லைனு விடுவதற்கு நான் டிரம்ப் இல்லை.. உத்தவ் தாக்கரே செம உதார்!

Google Oneindia Tamil News

மும்பை: கொரோனாவால் மக்கள் பாதிக்கப்படுவதை வேடிக்கை பார்க்க நான் ஒன்றும் டொனால்ட் டிரம்ப் இல்லை என சிவசேனா கட்சியின் சாம்னா சார்பில் எடுக்கப்பட்ட பேட்டியில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

இந்த பேட்டி இன்னும் முழுவதுமாக வெளியாகவில்லை. இந்த வார இறுதியில் இரு எபிசோட்களாக வெளியாகவுள்ளது. அதற்கு முன்னர் இந்த பேட்டியின் டீசர் வெளியிடப்பட்டது. அதில் டொனால்ட் டிரம்ப் குறித்து உத்தவ் பேசிய கருத்துகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சாத்தான்குளம் வழக்கு.. சிபிஐ அதிகாரிக்கு கொரோனா உறுதி.. 3 காவலர்களுக்கு ஆக.5 வரை சிறை சாத்தான்குளம் வழக்கு.. சிபிஐ அதிகாரிக்கு கொரோனா உறுதி.. 3 காவலர்களுக்கு ஆக.5 வரை சிறை

சாம்னா

சாம்னா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை தாண்டியது. அதில் முதலிடத்தில் மகாராஷ்டிர மாநிலம் இருக்கிறது. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் சிவசேனா அரசு மேற்கொண்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சிவசேனாவின் பத்திரிகையான சாம்னாவுக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே பேட்டி அளித்தார்.

தளர்வுகள்

தளர்வுகள்

பேட்டியின் முழு வீடியோ இந்த வார இறுதியில் வெளியாகும் நிலையில் தற்போது டீசர் வெளியாகியுள்ளது. அதில் சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் கேட்ட கேள்விகளுக்கு முதல்வர் தாக்கரே பதில் அளித்துள்ளார். மாநிலத்தில் லாக்டவுன் நீடித்து வந்தாலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றாக நாங்கள் தளர்வுகளை அளித்து வருகிறோம்.

உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றம்

மகாராஷ்டிராவில் இறுதியாண்டு தேர்வுகளை நடத்த விரும்பினாலும் தற்போதைய மோசமான சூழலில் தேர்வுகளை நடத்த இயலாது. தேர்வு நடத்த வேண்டும் என்ற முடிவை எதிர்த்து மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. தேர்வை நடத்தாமல் இருப்பதே பல மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியில் இருப்போருக்கு நன்மையாகும்.

பரவாயில்லை

பரவாயில்லை

கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை என லாக்டவுனை முழுவதுமாக தளர்த்த முடியாது. அவ்வாறு மகாராஷ்டிராவில் தளர்த்துவதற்கு நான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இல்லை. அவர்தான் கடும் ஊரடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார். எனவே மகாராஷ்டிராவில் மிகவும் எச்சரிக்கையுடனே கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறோம். ஏனென்றால் கொரோனாவின் இரண்டாவது அலை குறித்த அச்சம்தான் என்றார் உத்தவ் தாக்கரே.

English summary
Maharastra CM Uddhav Thackeray says that I am not Donald Trump so i cannot see my people suffer for disease.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X