மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

படா பேஜாரா போச்சுப்பா.. இப்போதைக்கு ஓயாது போல.. உத்தவ் தாக்கரே - அம்ருதா சண்டை!

வங்கி கணக்கை மாற்ற உத்தவ் தாக்கரே முடிவு செய்துள்ளதாக தெரிகிறது

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி ஆட்சியைப் பிடித்ததோடு பிரச்சினை ஓய்ந்தது என்று பார்த்தால் அது இப்போதைக்கு முடியாது போல.. இழுத்தடித்துக் கொண்டே போகிறது. இப்போது முதல்வர் உத்தவ் தாக்கரே எடுக்கப் போகும் ஒரு முடிவுதான் அங்கு பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிராவில் பெரும் நாடகங்களுக்கு மத்தியில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. முதல்வராக உத்தவ் தாக்கரே பொறுப்பேற்றுள்ளார்.

இந்த ஆட்சி அமைந்ததோடு பிரச்சினை எல்லாம் முடிவுக்கு வந்தது என்று பார்த்தால் முடியாது போல. அடுத்தடுத்து புதுப் புது பிரச்சினைகள் உருவெடுத்துக் கொண்டுள்ளன.

சூரிய கிரகணம்.. பகுத்தறிவு வியாதி.. முழு இந்து விரோதி.. தி.க மீது ஆவேசமாக பாயும் எச். ராஜா சூரிய கிரகணம்.. பகுத்தறிவு வியாதி.. முழு இந்து விரோதி.. தி.க மீது ஆவேசமாக பாயும் எச். ராஜா

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

இப்போது ஆக்சிஸ் வங்கி ரூபத்தில் ஒரு பிரச்சினை கிளம்பியுள்ளது. இவர்கள் பிரச்சினையில் ஆக்சிஸ் வங்கி ஏன் வந்தது என்று குழப்பம் வரலாம். காரணம் இருக்கு. நாட்டின் மிகப் பெரிய தனியார் வங்கிகளில் ஒன்று ஆக்சிஸ் வங்கி. இந்த வங்கியில்தான் மகாராஷ்டிர காவல்துறையினரின் சம்பளக் கணக்குகள் உள்ளன.

ஆக்சிஸ் வங்கி

ஆக்சிஸ் வங்கி

இந்த கணக்குகளை தற்போது வேற வங்கிக்கு மாற்ற மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளதாம். இதற்கு ஒரு பேக்கிரவுண்ட் காரணம் இருக்கு. அதாவது இந்த ஆக்சிஸ் வங்கியில் மிக முக்கிய பொறுப்பை வகித்து வருகிறார் அம்ருதா பட்னாவிஸ். இவர் முன்னாள் பாஜக முதல்வர் பட்னாவிஸின் மனைவி. பட்னாவிஸ் காலத்தில்தான் போலீஸாரின் சம்பளக் கணக்குகள் இந்த வங்கிக்கு மாற்றப்பட்டது.

வங்கி கணக்கு

வங்கி கணக்கு

ஆக்சிஸ் வங்கிக்கு போலீஸ் கணக்குகள் வந்ததால் அந்த வங்கிக்கு மகாராஷ்டிராவில் பெரும் பயன்கள் கிடைத்தன. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த கணக்குகளை தொடர்ந்து அம்ருதா தொடர்புடைய வங்கியில் வைத்திருக்க விரும்பவில்லை உத்தவ் தாக்கரே. இதனால்தான் வேறு வங்கிக்கு மாற்றப் போகிறார் உத்தவ் என்று சொல்கிறார்கள். விரைவில் இதுதொடர்பான முடிவை உத்தவ் எடுப்பார் என்று சொல்கிறார்கள்.

சம்பளம்

சம்பளம்

தற்போது ஆக்சிஸ் வங்கியில் 2 லட்சம் போலீஸாரின் சம்பளக் கணக்குகள் உள்ளன. மொத்தமாக வருடத்திற்கு ரூ. 11,000 கோடி வரை சம்பளமாக இந்த வங்கி மூலம் பட்டுவாடா செய்யப்படுகிறதாம். பட்னாவிஸ் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை ஸ்டேட் பாங்க்தான் இந்த கணக்குகளை வைத்திருந்தது. பட்னாவிஸ் வந்த பிறகுதான் தனது மனைவி முக்கிய பங்கு வகிக்கும் ஆக்சிஸ் வங்கிக்கு மாற்றினாராம்.

காரணங்கள்

காரணங்கள்

பட்னாவிஸ் இந்த வங்கிக் கணக்குகளை மாற்றியபோது அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தனிப்பட்ட காரணங்களுக்காக முதல்வர் பட்னாவிஸ் இந்த மாற்றத்தை செய்துள்ளார். இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவில் நாக்பூரைச் சேர்ந்த சமூக சேவகர் மோனிஷ் ஜபல்புரே என்பவர் புகாரும் கொடுத்தார்.

தொடர் மோதல்

தொடர் மோதல்

மறுபக்கம் உத்தவ் தாக்கரே, அம்ருதா இடையிலான மோதலும் தொடர்ந்தபடியே உள்ளது. தாக்கரேன்னு பெயர் வச்சிருந்தா பால் தாக்கரே ஆகி விட முடியுமா என்று நக்கலடிக்கப் போக சிவசேனா கட்சியினர் கொதித்துப் போய் விட்டனர். போராட்டத்திலும் ஈடுபட்டனர். இப்போது ஆக்சிஸ் வங்கி விவகாரத்தில் மீண்டும் பூதம் கிளம்பும் என்றே பேசிக் கொள்கிறார்கள்.

English summary
chief minister uddhav thackeray to decide on withdrawing salary accounts from axis bank because of amrutha fadnavis
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X