மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

“பாய்காட் பதான்”.. கொச்சைபடுத்தாதீங்க! பாஜகவினரையே மறைமுகமாக விமர்சித்த மத்திய அமைச்சர் அனுராக்

பாய்காட் கலாச்சாரம் சினிமா சூழலையே கொச்சைப்படுத்தி வருவதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் விமர்சித்து உள்ளார்.

Google Oneindia Tamil News

மும்பை: காவி உடையை அவமதித்த காரணத்துக்காக ஷாரூக் கான் நடித்த பதான் திரைப்படத்தை புறக்கணிக்க வேண்டும் என பாய்காட் பதான் என்ற ஹேஷ்டேக்கை பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்பினர் ட்விட்டரில் டிரெண்ட் செய்த நிலையில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அதற்கு கண்டனம் தெரிவித்து இருக்கிறார். பாய்காட் கலாச்சாரம் இந்திய சினிமா சூழலையே கொச்சைப்படுத்துவதாக அவர் கூறி உள்ளார்.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஷாரூக் கான் நடிப்பில் வெளியாகி இருக்கும் பதான் திரைப்படத்தை புறக்கணிக்க வேண்டும் என இந்துத்துவ அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்து பேசிய அனுராக் தாக்கூர், "உலகின் மூலை முடுக்குகளிலும் இந்திய திரைப்படங்கள் தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன. இதன் மூலம் மென்மையான சக்தியாக இந்தியா உருவெடுத்து வருகிறது. இந்த சூழலை பாய்காட் கலாச்சாரம் கொச்சைப்படுத்துவதாக அமைந்து உள்ளது. திரைப்படத்தில் ஏதாவது பிரச்சனை என்றால் சம்பந்தப்பட்ட துறையிடம் தெரிவிக்க வேண்டும்.

ஷாரூக்கான் யாருன்னே எனக்கு தெரியாது.. பதான் விவகாரத்தில் அஸ்ஸாம் முதல்வர் அதிர்ச்சி தகவல் ஷாரூக்கான் யாருன்னே எனக்கு தெரியாது.. பதான் விவகாரத்தில் அஸ்ஸாம் முதல்வர் அதிர்ச்சி தகவல்

அனுராக் தாக்கூர் கருத்து

அனுராக் தாக்கூர் கருத்து

அதன் மூலம் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு அதுபற்றி தெரிவிக்கப்படும். ஆனால், சில நேரங்களில் சூழலை கொச்சைப்படுத்துவதற்காக சிலர், அரைகுறையாக தெரிந்துகொண்டு கருத்துக்களை தெரிவிக்கின்றனர். இதனால் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதுபோல் இனி நடக்கக்கூடாது." என்றார்.

 பாய்காட் ஹேஷ்டேக்குகள்

பாய்காட் ஹேஷ்டேக்குகள்

ஷாரூக் கான் நடித்த பதான் திரைப்படத்துக்கு முன்பாக அமீர் கான் நடித்த லால் சிங் சத்தா, தீபிகா படுகோனேவின் பத்மாவத் போன்ற திரைப்படங்களையும் புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி பாய்காட் ஹேஷ்டேக்குகள் டிரெண்ட் செய்யப்பட்டன. இதனாலேயே லால் சிங் சத்தா திரைப்படம் போதிய வரவேற்பை பெறவில்லை என்றும் கூறப்பட்டது.

பதான் திரைப்படம்

பதான் திரைப்படம்

இந்த நிலையில் 4 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இந்தி நடிகர் ஷாரூக் கான் நடிப்பில் பதான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. சித்தார்த் ஆனந்த் இயக்கி உள்ள இப்படத்தில் தீபிகா படுகோனே நாயகியாக நடித்து உள்ளார். ஷாரூக் கான் மட்டுமின்றி இந்த படத்தில் பிரபல நடிகர் ஜான் ஆப்ரஹாம், அசுதோஷ் ரானா, கௌதம் ரோட் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளார்கள்.

பேஷாராம் ராங் பாடல்

பேஷாராம் ராங் பாடல்

விஷால் - சேகர் இப்படத்துக்கு இசையமைத்து இருக்கிறார்கள். பிரபல பாலிவுட் நடிகர்களான சல்மான் கான் மற்றும் ரித்திக் ரோஷன் ஆகியோர் பதான் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து உள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி இந்த திரைப்படத்தின், "பேஷாராம் ராங்" என்ற முதல் பாடல் வெளியாகி இந்திய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

பாஜகவினர் எதிர்ப்பு

பாஜகவினர் எதிர்ப்பு

இந்த பாடலில் தீபிகா, காவி நிறத்திலான உடையை அணிந்து உள்ளதற்கு இந்துத்துவா அமைப்பினரும் பாஜகவினரும் கடும் கண்டனங்களை பதிவு செய்து பாய்காட் பதான் என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்தனர். திரையரங்குகளை கொளுத்த வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அதற்கு நேர்மாறாத இந்த திரைபடம் பெரும் வெற்றிபெற்று சில நாட்களிலேயே 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இருப்பினும் பதான் படம் திரையிடப்படும் திரையரங்குகள் ஆங்காங்கே தாக்கப்பட்டு வருகின்றன.

English summary
Union Information and Broadcasting Minister Anurag Thakur has criticized that the boycott culture is tarnishing the cinema environment itself.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X