மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

போதை மருந்து பிறப்பிடமே உங்க ஸ்டேட் ஹிமாச்சல்தான்..கங்கனா ரனாவத் மீது நடிகை ஊர்மிளா கடும் பாய்ச்சல்!

Google Oneindia Tamil News

மும்பை: பாலிவுட்டில் போதை மருந்து அச்சுறுத்தல் அதிகமாகவே இருப்பதாக நடிகை கங்கனா ரனாவத் குற்றம்சாட்டிய நிலையில் ஏன் அவரது சொந்த மாநிலமான ஹிமாச்சல் பிரதேசத்தில் போதை பொருளே இல்லையா , போதை பொருளுக்கு எதிரான போரை ஹிமாச்சல்லில் இருந்தே தொடுக்கலாமே என ரங்கீலா நடிகை ஊர்மிளா மடோன்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், சுஷாந்திற்கு தெரியாமல் ரியா சக்கரவர்த்தி அவ்வப்போது போதை மருந்தை தண்ணீரிலும் உணவிலும் கலந்து கொடுத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அது போல் சுஷாந்தின் மரணம் தற்கொலை அல்ல, கொலை என்று கங்கனா ரனாவத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பாலிவுட்டில் நடக்கும் பார்ட்டிகள் குறித்து கங்கனா அண்மையில் பகீர் தகவலை அளித்துள்ளார்.

திருச்சி அருகே குடித்துவிட்டு கோயிலில் தூங்கிய போதை ஆசாமி.. தட்டிக்கேட்ட மூதாட்டி படுகொலை திருச்சி அருகே குடித்துவிட்டு கோயிலில் தூங்கிய போதை ஆசாமி.. தட்டிக்கேட்ட மூதாட்டி படுகொலை

தடுப்பு பிரிவு

தடுப்பு பிரிவு

போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு உதவி செய்ய நான் தயாராக இருக்கிறேன், ஆனால் மத்திய அரசு எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் என் கெரியரை மட்டும் அல்ல, என் உயிரையே பணயம் வைக்கிறேன், சுஷாந்துக்கு சில உண்மைகள் தெரிந்துள்ளதால் அவரை கொலை செய்து விட்டார்கள். பாலிவுட்டில் கொக்கைன் எனும் போதை மருந்து அனைத்து பார்ட்டிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

சுத்தம்

சுத்தம்

பெரிய திரை பிரபலங்கள் வீடுகளுக்கு சென்றால் இலவசமாகவே கொடுப்பார்கள். அதை நீரில் கலந்து கொடுத்தால் நமக்கே தெரியாது. போதை தடுப்பு பிரிவினர் பாலிவுட்டில் நுழைந்தால் பல முன்னணி பிரபலங்கள் சிறையில்தான் இருப்பார்கள். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பிரதமர் பாலிவுட்டில் உள்ள சாக்கடையை சுத்தம் செய்வார் என நம்புகிறேன் என தெரிவித்திருந்தார்.

அச்சுறுத்தல்

அச்சுறுத்தல்

இவரது கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கங்கனாவை ஊர்மிளா கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில் போதை மருந்துக்கு எதிரான போராட்டத்தை கங்கனா தனது சொந்த மாநிலமான ஹிமாச்சல்லில் இருந்து தொடங்க வேண்டும். ஒட்டுமொத்த நாடும் போதை பொருள் அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது.

பாலிவுட்

பாலிவுட்

போதை பொருள்களின் உற்பத்தியே ஹிமாச்சல்லில் இருந்துதான் என்பது கங்கனாவுக்கு தெரியாதா என்ன? எனவே போதை மருந்தை ஒழிக்க அவர் தனது சொந்த மாநிலத்திலிருந்து தொடங்க வேண்டும். கங்கனா மும்பை குறித்தும் பாலிவுட் குறித்தும் அறுவறுக்கத்தக்க கருத்தை தெரிவித்துள்ளார்.

சொல்வதெல்லாம் உண்மை என்பதல்ல

சொல்வதெல்லாம் உண்மை என்பதல்ல

மும்பை அனைவருக்கும் சொந்தமானது என்பதில் சந்தேகமே இல்லை. மும்பையின் மகளான என்னால் அந்த நகரத்திற்கு எதிரான அவமதிப்பு கருத்துகள் சொல்வதை பொறுத்துக் கொள்ள முடியாது. இதுபோல் மும்பைக்கு எதிராக ஒரு கருத்தை நீங்கள் சொல்லும் போது அந்த நகரத்தை மட்டுமல்ல, அந்த நகர மக்கள் அனைவரையும் நீங்கள் அவமரியாதை செய்கிறீர்கள் என்பது அர்த்தம். ஒருவர் எப்போதும் கத்திக் கொண்டே இருந்தால், அவர் சொல்வதெல்லாம் உண்மை என்பது அர்த்தமல்ல என்றார் ஊர்மிளா.

English summary
Urmila Matonkar attacks Kangana Ranaut on Drugs issue over her remark that drug menace in bollywood.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X