மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கூகுளில் வயிற்றுப்போக்கு தகவல் தேடினால்... கொரோனா ஹாட்ஸ்பாட்...ஆய்வில் தகவல்!!

Google Oneindia Tamil News

மும்பை: கூகுளில் யாராவது வயிற்றுப் போக்கு தொடர்பான விவரங்களை தேடினால், அந்தப் பகுதிகளில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் என்று புதிய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி அடிக்கடி தனது மரபணுவை மாற்றி அல்லது உருமாற்றம் செய்து கொண்டு வருகிறது. ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும்போது இந்த வைரஸ் மரபணு மாற்றம் செய்து கொள்வதால் இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதிலும், தாமதம் ஏற்பட்டு வருகிறது.

 US study says GI symptoms searches in the internet can help identify Covid-19 hotspots

இந்த தொற்றின் முக்கிய அறிகுறியாக முன்பு வயிற்றுப்போக்கும் இருக்கும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் மசாசூசெட்ஸ் பொது மருத்துவமனை இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வில் எந்த ஒரு இடத்தில் இருந்து அதிகமாக கூகுளில் வயிற்றுப்போக்கு தொடர்பான விஷயங்களை தேடுகிறார்களோ அங்கு கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் அதாவது கொரோனா ஹாட்ஸ்பாட் என்று எடுத்துக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

திமுக எம்பி ஒருவர் உள்பட... 25 எம்பிக்களுக்கு... கொரோனா தொற்று உறுதி!!திமுக எம்பி ஒருவர் உள்பட... 25 எம்பிக்களுக்கு... கொரோனா தொற்று உறுதி!!

நடப்பாண்டில் ஜனவரி 20 முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை மசாசூசெட்ஸ் பொது மருத்துவமனை அமெரிக்காவின் 15 மாநிலங்களின் இன்டர்நெட் குறித்த ஆய்வை மேற்கொண்டு இருந்தது. இதில், பசி இல்லாமல், வயிற்றுப்போக்கு குறித்து அதிகமாக தகவல்களை தேடியுள்ளனர். இவைதான் கொரோனாவுக்கு முக்கிய அறிகுறிகளாக பார்க்கப்பட்டது. இது கொரோனா தொற்றுடன் தொடர்புடையதாகவே இருந்தது.

இந்த சமயத்தில் கொரோனா தொற்று இருந்த பலருக்கும் வயிற்றுப் போக்கு மற்றும் அடிவயிற்று வலி இருந்துள்ளது. இதுதொடர்பாக இன்டர்நெட்டில் தகவல்களை சேகரித்து வந்துள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும், கூகுள் டிரென்ட் வைத்து எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு பேருக்கு கொரோனா தொற்று என்று கணக்கிட்டுள்ளனர்.

English summary
US study says GI symptoms searches in the internet can help identify Covid-19 hotspots
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X