மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா உச்சத்தில் மகாராஷ்டிரா.. கோவிட் 19 மருத்துவமனைகளில் திபுதிபுவென புகுந்த மழைநீர்

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிராவில் முன்கூட்டியே பெய்த பருவமழையால் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள கொரோனா மருத்துவமனையில் வெள்ளநீர் புகுந்தது. இதையடுத்து அங்கிருந்த கொரோனா நோயாளிகள் நள்ளிரவில் மேல் தளத்திற்கு மாற்றப்பட்டனர்.

Recommended Video

    கொரோனா உச்சத்தில் மகாராஷ்டிரா.. கோவிட் 19 மருத்துவமனைகளில் திபுதிபுவென புகுந்த மழைநீர்

    வடமாநிலங்களில் பருவமழை முன்கூட்டியே பெய்து வருகிறது. அந்த வகையில் சனிக்கிழமை நள்ளிரவில் மகாராஷ்டிராவின் வடக்கு பகுதியில் தொடர்ந்து 2 மணி நேரங்களுக்கு மழை பெய்தது.

    Video shows Rainwater flooding in Maharastra hospital

    இதனால் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் கோதாவரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மழை நீர் புகுந்தது. இதையடுத்து கொரோனா நோயாளிகளும் அவர்தம் உறவினர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    தரைதளத்தில் இருந்த 12 நோயாளிகளும் உறவினர்களும், அவசர சிகிச்சை பிரிவில் விபத்தால் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து நேற்று நள்ளிரவு நேரத்தில் கீழ் தளத்தில் இருந்த நோயாளிகள் பாதுகாப்பாக மேல் தளத்திற்கு மாற்றப்பட்டனர்.

    பலத்த காற்று வீசும்.. தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் செம நியூஸ்!பலத்த காற்று வீசும்.. தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் செம நியூஸ்!

    எனினும் சில மருத்துவ உபகரணங்களும் கருவிகளும் கீழ் தளத்திலேயே இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. மருத்துவமனை அருகே ஒரு கட்டுமானப் பணிதான் வெள்ளம் புகுந்ததற்கு காரணம். சாலை உயரமாக்கப்பட்டதால் மருத்துவமனையை நோக்கி சாய்வு ஏற்பட்டு வெள்ள நீர் மருத்துவமனைக்கு வந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் குற்றம்சாட்டுகிறது.

    இதுகுறித்து ஜால்கான் மாவட்டத்தின் முன்னாள் அமைச்சர் கிரிஷ் மஹாஜன் கூறுகையில் மகாராஷ்டிராவில் உள்ள நிலைமை மிகவும் மோசம். அதிகாரிகள் ஒன்றும் செய்யவில்லை. திட்டமிடல் இல்லை, நிலைமையை முன் நின்று நடத்த யாரும் இல்லை, இந்த சிவசேனை அரசு எதை பற்றியும் கவலைப்படுவதாக தெரியவில்லை என்றார்.

    English summary
    Video shows how rain water flooding in Maharastra's Covid 19 hospital.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X