மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விகாஸ் துபேவின் உதவியாளர் குட்டன் திரிவேதி கைது.. அகிலேஷுக்கு நெருக்கமானவரா குட்டன்?

Google Oneindia Tamil News

மும்பை: விகாஸ் துபேவின் உதவியாளர் குட்டன் திரிவேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் கைது செய்யப்பட்டார். இவர் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்தவர் என கூறப்படுகிறது.

விகாஸ் துபே கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் 2001-ஆம் ஆண்டு பாஜக மூத்த தலைவரும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் அமைச்சருமான சந்தோஷ் சுக்லாவை போலீஸ் ஸ்டேஷனில் வைத்தே கொலை செய்தவர் விகாஸ்.

Vikas Dubey aide Guddan Trivedi arrested in Maharasatra

இந்த நிலையில் பல்வேறு கொலை வழக்குகள் அவர் மீது பதியப்பட்டுள்ளன. இதையடுத்து அவரை கைது செய்ய புோலீஸார் அவரது சொந்த கிராமத்திற்கு வருவதை முன் கூட்டியே போலீஸார் சிலர் விகாஸுக்கு தகவல் தெரிவித்துவிட்டனர்.

இதையடுத்து விகாஸ் துபே தப்பிப்பதற்குள் போலீஸார் அவரது வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது டிஎஸ்பி உள்பட 8 பேரை துப்பாக்கியால் சுட்டார் விகாஸ் துபே. பின்னர் மத்திய பிரதேசத்திலிருந்து உத்தரப்பிரதேசத்திற்கு தப்பிவிட்டார்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் விகாஸை கைது செய்த போலீஸார் நேற்று அவரை கான்பூருக்கு அழைத்து செல்ல முயன்ற போது அவர் தப்பியோட முயற்சித்ததாக கூறி அவரை சுட்டுக் கொன்றனர்.

விகாஸ் துபேவின் உதவியாளரான அரவிந்த் அகா குட்டன் திரிவேதியை போலீஸார் தேடி வந்தனர். அவர் மகாராஷ்டிர மாநிலம் தானேவில் மறைந்திருப்பது தெரியவந்தது.

ஜம்மு காஷ்மீரில் நுழைய காத்திருக்கும் 300 தீவிரவாதிகள்... ராணுவ அதிகாரி அதிர்ச்சி தகவல்!!ஜம்மு காஷ்மீரில் நுழைய காத்திருக்கும் 300 தீவிரவாதிகள்... ராணுவ அதிகாரி அதிர்ச்சி தகவல்!!

இதையடுத்து ரகசிய தகவலின் அடிப்படையில் தானேவில் மறைந்திருந்த குட்டனையும் அவரது டிரைவர் சோனு திவாரியையும் போலீஸார் கைது செய்தனர். சந்தோஷ் சுக்லா கொலையில் திரிவேதிக்கும் பங்கிருப்பதாக தெரிகிறது. அது போல் 8 போலீஸாரை விகாஸ் கொன்றவுடன் குட்டன் அந்த கிராமத்தில் உள்ள ஒரு கடையில் போனை வைத்துவிட்டு மத்திய பிரதேச மாநிலம் தட்டியாவிற்கு தனது டிரைவருடன் தப்பியோடிவிட்டார்.

பின்னர் நாசிக், புணே சென்ற அவர்கள் லாரி வழியாக தானே சென்றடைந்தார். இந்த குட்டன் திரிவேதி சமாஜ்வாதி கட்சியை சேர்ந்தவர் என்றும் அவர் முலாயம் சிங் மற்றும் அகிலேஷ் யாதவிற்கு நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது.

English summary
Vikas Dubey's aide Guddan Trivedi arrested in Maharastra. Is he belongs to Samajvadi party?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X