மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தண்ணீர் திருட்டு.. 24 மணி நேரமும் சுழற்சி முறையில் குளத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்!

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு குளத்தை 24 மணி நேரமும் மக்கள் காவல் காத்து வரும் சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ளது தல்வாடா கிராமம். இங்குள்ள ஊர்மக்கள் குளத்து தண்ணீரைத்தான் குடிப்பதற்கு பயன்படுத்துகின்றனர்.

இந்த நிலையில் அக்கம்பக்கம் ஊர்களில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் தல்வாடா கிராமத்தில் உள்ள குளத்து நீரை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

[சீன இளைஞரின் அக்கப்போர்.. பிளாஸ்டிக் ஸ்பூனை விழுங்கி படாதபாடு!]

குழாய்கள் பதிப்பு

குழாய்கள் பதிப்பு

தங்கள் தேவைக்கே இந்த தண்ணீர் பற்றாத நிலையில் உள்ளது, நீங்கள் பயன்படுத்தினால் எப்படி என்று கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பக்கத்து கிராமத்தினர் இந்த குளத்தில் திருட்டுத் தனமாக குழாய்களை பதித்து தண்ணீர் எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர்.

புகார்

புகார்

இதை தல்வாடா கிராம மக்கள் அறிந்து கொண்டனர். இதையடுத்து எங்களுக்கென இருக்கும் இந்த குளத்தை நீங்கள் திருட்டுத்தனமாக பயன்படுத்தினால் எப்படி என கேட்டு இந்த திருட்டை தடுக்க போலீஸ், தாசில்தார், மாவட்ட நீதிபதி ஆகியோரிடம் புகார் கொடுத்துள்ளனர்.

காவல்

காவல்

அவர்களும் இந்த புகாரை கண்டுக் கொள்ளவில்லை. நாளுக்கு நாள் தண்ணீரும் குறைந்துவந்தது. இப்படியே விட்டால் நாம் எங்கு போய் தண்ணீருக்கு அல்லாடுவது என நினைத்த மக்கள் குளத்தை காவல் காப்பது என முடிவு செய்தனர்.

தண்ணீர் குறைவு

தண்ணீர் குறைவு

அதன்படி தாங்களாகவே ஷிப்ட் முறையில் குளத்தை இரவும் பகலும் பாதுகாத்து வருகின்றனர். சுமார் 4500 பேர் இந்த குளத்தை பாதுகாத்து வருகின்றனர். இதுகுறித்து பஞ்சாயத்து தலைவர் கூறுகையில் அருகில் உள்ள கிராமத்தினர் தண்ணீரை திருடுகின்றனர். இதனால் தண்ணீர் இருப்பு குறைந்து வருகிறது.

வேதனை

வேதனை

இன்னும் 30 நாட்களுக்கு இந்த திருட்டை தொடர்ந்தால் குளத்தின் மொத்த நீரும் காலியாகிவிடும். நாங்களும் எங்கள் கால்நடைகளும் ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காமல் தவிக்க வேண்டி வரும் என தெரிவித்தார். தண்ணீருக்காக மக்கள் பெரும் பாடுபடுகின்றனர் என்பது வேதனையை ஏற்படுத்துகிறது.

English summary
Residents of Talwada village in Maharashtra's Vaijapur tehsil protects water from stealing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X