மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விநாயகர் சதுர்த்தி விழா ரத்து மும்பை லால்பாக்சா ராஜா கணேசோத்சவ் மண்டல் அறிவிப்பு

கொரோனா தொற்று காரணமாக மும்பையில் உள்ள லால்பாக்சா ராஜா கணேசோத்சவ் மண்டல் இந்த வருட விநாயக சதுர்த்தி விழாவை ரத்து செய்துள்ளது.

Google Oneindia Tamil News

மும்பை: கொரோனா வைரஸ் தொற்றால் மகாராஷ்டிரா மாநிலம் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆடம்பரமாக விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வாய்ப்பு இல்லை என்ற அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இதனையடுத்து மும்பையில் உள்ள லால்பாக்சா ராஜா கணேசோத்சவ் மண்டல் இந்த வருட விநாயக சதுர்த்தி விழாவை ரத்து செய்துள்ளது. அதற்குப் பதிலாக அதே இடத்தில் இரத்தம் மற்றும் பிளாஸ்மா தான முகாம் ஒன்றை நடத்த அமைப்பு முடிவு செய்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முதன்மையானது விநாயகர் சதுர்த்தி. நாட்டின் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் இங்கு விநாயகர் சதுர்த்தி கோலாகலமாகவும், ஆடம்பரமாகவும் கொண்டாடப்படுகிறது. 10 நாள் கொண்டாடப்படும் இந்த விழாவின் போது மாநில தலைநகர் மும்பை பெருநகரம் பத்து நாட்களும் களைகட்டும்.

 Vinayagar chathurthi 2020: No Ganeshotsav this year Lalbaugcha Raja announced

சர்வஜனிக் மண்டல்களிலும், வீடுகளிலும் மக்கள் சிறியது முதல் பிரமாண்டமான விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடுவார்கள். விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடும் அமைப்புகளுடன் கடந்த வாரம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசிய உத்தவ் தாக்கரே கலந்து விநாயகர் சதுர்த்தி விழாவை எளிமையாக நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலத்தின்போது கூட்டம் அதிக அளவில் கூட அனுமதிக்கக் கூடாது என்றும் சமூக பொறுப்பை மனதில் வைத்துக் கொண்டு விழாவை எளிமையாக கொண்டாடி உலக மக்கள் முன் உதாரணமாக திகழ வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

சேலம்-பெங்களூர் நெடுஞ்சாலையில் மேம்பாலம்.. எடப்பாடியார் திறந்து வைத்தார்.. விபத்து குறைய வாய்ப்புசேலம்-பெங்களூர் நெடுஞ்சாலையில் மேம்பாலம்.. எடப்பாடியார் திறந்து வைத்தார்.. விபத்து குறைய வாய்ப்பு

முதல்வரின் அறிவிப்பு மற்றும் கொரோனா தொற்று காரணமாக மும்பையில் உள்ள லால்பாக்சா ராஜா கணேசோத்சவ் மண்டல் இந்த வருட விநாயக சதுர்த்தி விழாவை ரத்து செய்துள்ளது. லால்பாக்சா ராஜா கணேசோத்சவ் மண்டல் அமைப்பு ஒவ்வொரு வருடமும் விநாயக சதுர்த்தி விழாவைப் பிரம்மாண்டமாக நடத்தி வருகிறது. பல புதிய அமைப்புக்களுடன் விநாயகர் சிலை அமைக்கப்பட்டு பூஜை நடைபெறும்.

லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து பிரம்மாண்ட விநாயகரை வழிபடுவார்கள். திரை பிரபலங்களும், அரசியல்வாதிகளும் இங்கு வந்து வழிபட்டு செல்வார்கள். இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த அமைப்பு விநாயகர் சதுர்த்தி விழாவை ரத்து செய்துள்ளது அதற்குப் பதிலாக அதே இடத்தில் இரத்தம் மற்றும் பிளாஸ்மா தான முகாம் ஒன்றை நடத்த அமைப்பு முடிவு செய்துள்ளது.

English summary
Lalbaughcha Raja Ganeshotsav Mandal has decided not to hold Ganeshotsav this time in wake of #COVID19 pandemic.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X