அசந்து தூங்கியது குற்றமா! விமான கார்கோவிலேயே உறங்கிய லோட்மேன்- தரையிறங்கும் போதுதான் செம ட்விஸ்ட்
மும்பை: மும்பையில் இருந்து விமானம் மூலம் அபு தாபிக்கு ஒருவர் விமான கார்கோவிலேயே பயணம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொதுவாக விமானங்களில் கீழ் பகுதியிலும், பின் பக்கத்திலும் கார்கோ இருக்கும். இங்குதான் பயணிகளின் செக் இன் லக்கேஜ் வைக்கப்பட்டு இருக்கும். அதேபோல் பார்சல் அனுப்பப்படும் பொருட்களும் இதில்தான் இருக்கும்.
மார்கழி மாத ராசி பலன்கள் 2021: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும்
இந்த கார்கோவில் பொதுவாக அந்த குறிப்பிட்ட விமான ஊழியர்கள்தான் பொருட்களை ஏற்றுமதி செய்வார்கள். இவர்களை லோடார் என்று அழைப்பார்கள்.

லோடார்
அந்த வகையில் மும்பையில் இருந்து அபுதாபி செல்லும் இண்டிகோ விமானத்தின் லோடர் ஒருவர் பொருட்களை விமானத்தில் ஏற்றி இருக்கிறார். பின்னர் உள்ளேயே கார்கோவில் சில நிமிடங்கள் படுத்தவர் அங்கேயே அசந்து தூங்கிவிட்டார். கொஞ்சம் அசந்து தூங்கிவிட்டேனாம்.. அதை பெரிதாக பேசுகிறார்கள் என்று வடிவேலு போல அவரும் அசந்து தூங்கிவிட்டார்.

ஊழியர்கள்
இவர் தூங்கியதை கவனிக்காத மற்ற ஊழியர்கள், அவரை உள்ளேயே வைத்து கார்கோ கதவை மூடி உள்ளனர். விமானமும் மும்பையில் இருந்து துபாய் சென்றுள்ளது. பொதுவாக கார்கோவில் கேபின் பிரஷர் குறைவாக இருக்கும். மக்கள் அமரும் இடங்களில் பிரஷர் செயற்கையாக சமநிலை செய்யப்படுவது போல கேபினில் பிரஷர் நன்றாக இருக்காது.

சிக்கல்
இதனால் உள்ளே மாட்டும் நபர்கள் சமயங்களில் மூச்சு பிரச்சனை ஏற்பட்டு பலியாகும் வாய்ப்புகளும் கூட உள்ளன. ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த இண்டிகோ ஊழியருக்கு அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை. மாறாக அவர் டேக் ஆப் செய்யும் போதே தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார். ஆனால் கேபினுக்கு உள்ளே இருந்து பல முறை கத்தி கூப்பிட்டும் அவர் பேசியது யாருக்கும் கேட்கவில்லை.

இறங்கியது
கடைசியில் விமானம் அபுதாபியில் இறங்கி லோட் இறக்கிய போதுதான் அவர் உள்ளே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கார்கோவை திறந்து பார்த்தவர்களுக்கு என்ன ஆச்சர்யம் என்றால், அவர் முழு ஆரோக்கியத்துடன் இருந்துள்ளார். நல்ல உடல்நிலையோடு இருந்துள்ளார். இருப்பினும் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதனை செய்துள்ளனர்.

மீண்டும்
சோதனையில் அவரின் உடல்நிலையில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் அவரை விமானம் ஏற்றி இந்த முறை மக்கள் இருக்கும் சிட்டிங் பகுதியில் அமர வைத்து மும்பைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கார்க்கோவிலேயே பல மணி நேரம் பயணித்த ஒருவர் எப்படி நல்ல உடல்நிலையில் இருந்தார் என்பதுதான் விமான அதிகாரிகளை குழப்பி உள்ளது.