மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பால்தாக்ரே மும்பையின் பாதுகாவலரா? வெறுப்பு அரசியல் வித்தகரா? #thackeray

Google Oneindia Tamil News

Recommended Video

    வெளியானது தாக்கரே ட்ரைலர்... தென் இந்தியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வசனம்- வீடியோ

    மும்பை: 3 நிமிட தாக்ரே திரைப்பட ட்ரைலர் நாடு முழுக்க சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தென் இந்தியர்கள் மீது வெறுப்பை தூவும் வகையிலான வசனங்கள், காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன.

    பால்தாக்ரே பேச்சு, எழுத்து அனைத்துமே சர்ச்சையாகி வந்த நிலையில், அவரது வாழ்க்கை வரலாற்று படம் மட்டும் சர்ச்சைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும் என்று, எதிர்பார்க்க முடியாதுதான்.

    1960களுக்கு பிறகு மும்பையில் தமிழர்கள் உட்பட பல தென் மாநிலத்தவர்களும் அதிக அளவில் குடியேறினர். இதன்பிறகுதான், பால்தாக்ரே தீவிரமாக மும்பை மராட்டியர்களுக்கே என்ற கோஷத்தை முன் வைக்க தொடங்கினார். 1966ம் ஆண்டு சிவசேனா கட்சியை துவக்கினார்.

    சிவசேனா தாண்டவம்

    சிவசேனா தாண்டவம்

    1992 டிசம்பர் முதல் 1993ம் ஆண்டுவரை சிவசேனாவினர் பால்தாக்ரேவின் வெறுப்பு பிரச்சாரத்தால் உந்தப்பட்டு பெரும் கலவரங்களை மும்பையில் அரங்கேற்றினர். இரு கட்டங்களாக நடத்தப்பட்ட வெறியாட்டத்தில் 900 பேர் கொல்லப்பட்டனர். 2000த்திற்கும் அதிகமானோர், காயமடைந்தனர். அதில் பலரும் முஸ்லீம்கள்.

    வன்முறை வெறியாட்டம்

    வன்முறை வெறியாட்டம்

    இந்த சம்பவம் குறித்து விசாரித்த ஸ்ரீகிருஷ்ணா கமிஷன், ஒரு ராணுவ தளபதியைபோல தனது தீவிர ஆதரவு சிவசேனையினரை ஏவி வன்முறையை கட்டவிழ்த்தார், அதிலும் முஸ்லீம்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர் என்று கூறியுள்ளது. மும்பையை பார்த்தால் மினி பாகிஸ்தான் போல உள்ளது என மும்லீம்கள் மக்கள் தொகையை குறிப்பிட்டு விமர்சனம் செய்தவர்தான் பால் தாக்ரே.

    மதராசிகள்

    மதராசிகள்

    தென் இந்தியவர்கள், வட இந்தியர்கள், முஸ்லீம்கள் என அவர் வெறுப்பு பிரச்சாரம் கிளை பரப்பியது. நேற்று வந்த மதராசிகள் சில நாட்களிலேயே செல்வந்தர்களாகிவிடுகிறார்கள் என்று தென் இந்தியர்களை பார்த்து பொறாமை குரல் எழுப்பியவர் தாக்ரே.

    புனிதப்படுத்தப்பட்ட ட்ரைலர்

    புனிதப்படுத்தப்பட்ட ட்ரைலர்

    ஆனால், தாக்ரே திரைப்படத்தில், பால்தாக்ரே கதாப்பாத்திரம் புனிதப்படுத்தப்பட்டு உள்ளது. அவர் மராட்டியர்கள் உரிமைக்காக குரல் கொடுத்து போலவும், அதற்கான சூழ்நிலை என்ன என்றும் அதில் நியாயம் கற்பிக்கப்படுகிறது. புலி என வர்ணிக்கப்படுகிறார் தாக்ரே. சிவசேனா கட்சியின் டெல்லி முகமான சஞ்சய் ராவத்திடமிருந்து இப்படியான படத்தைதான் எதிர்பார்க்க முடியும். ஆனால், உண்மை வரலாற்றை மாற்றி எழுத முடியாது. கண்முன் சாட்சியாக இன்னும் பல மும்பை 'மதராசிகள்' இருக்கும்வரை.

    English summary
    The trailer of Thackeray, a biopic based on the life of Bal Thackeray, has already gathered its share of controversy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X