மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்ன பர்தாவை தடை செய்யணுமா? அது எங்கள் கொள்கை இல்லை பாஸ்.. சிவசேனா பலே பல்டி!

இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவதை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லை என்று சிவசேனா கட்சி தெரிவித்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    நாங்க பர்தாவை தடை செய்ய சொல்லவில்லை.. சிவசேனா அறிவிப்பு- வீடியோ

    மும்பை: இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவதை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லை, அது எங்கள் கொள்கை இல்லை என்று சிவசேனா கட்சி தெரிவித்து இருக்கிறது.

    கடந்த 21ம் தேதி ஞாயிறு அன்று இலங்கையில் வரிசையாக குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தது. இந்த குண்டுவெடிப்பில் 350க்கும் அதிகமானோர் பலியானார்கள். 450க்கும் அதிகமானோர் இதில் காயம் அடைந்தனர்.

    We dont want to put a ban on Burqa, It is not our policy says, Shiv Sena

    இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பின் வடுக்கள் இன்னும் ஆறவில்லை. இந்த தாக்குதலை அடுத்து இலங்கையில் நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது. மக்கள் பொது இடங்களில் கூட நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    பாலகோட் தாக்குதல் vs ரபேல் புகார்.. வாக்காளர்கள் ஆதரவு மோடிக்கா, ராகுலுக்கா? கள யதார்த்தம் இதுதான் பாலகோட் தாக்குதல் vs ரபேல் புகார்.. வாக்காளர்கள் ஆதரவு மோடிக்கா, ராகுலுக்கா? கள யதார்த்தம் இதுதான்

    அதேபோல் அங்கு பெண்கள் பர்தா அணிவதை தடை செய்து இருக்கிறார்கள். பாதுகாப்பு கருதி முகத்தை யாரும் மூட கூடாது. முகத்தை மூடுவது போல துணிகளை பயன்படுத்த கூடாது என்று இலங்கை அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இந்த நிலையில் இலங்கையை போலவே இந்தியாவிலும் பர்தாவை தடை செய்ய வேண்டும் என்று சிவசேனா கட்சியின் பத்திரிக்கையில் கட்டுரை வெளியானது. சிவசேனாவின் சாமனா மற்றும் தொபஹர் கா சாமனா ஆகிய பத்திரிக்கைகளில் இது தொடர்பாக கட்டுரை வந்தது.

    இஸ்லாமியர்கள் அணியும் பர்தாவிற்கு எதிராக கடுமையாக விமர்சனம் வைத்து இந்த கட்டுரை எழுதப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த கட்டுரை சமூக வலைத்தளங்களில் பெரிய வைரல் ஆனது. பலர் இதை மேற்கோள் காட்டி சிவசேனாவை விமர்சனம் செய்தனர்.

    இதையடுத்து இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவதை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லை, அது எங்கள் கொள்கை இல்லை என்று சிவசேனா கட்சி தெரிவித்து இருக்கிறது. கட்சியின் செய்தி தொடர்பாளர் நீளம் கோரே இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில், பர்தாவிற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. எங்கள் கட்சியும் எதிரானது கிடையாது. அந்த இதழில் வந்தது, கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்து மட்டுமே, இதற்கும் சிவசேனாவிற்கும் தொடர்பு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். இன்னும் 5 நாட்களில் ரம்ஜான் பண்டிகை வரும் நிலையில் இந்த கட்டுரை அங்கு பெரிய வைரலாகி உள்ளது.

    English summary
    We don't want to put a ban on Burqa, It is not our policy says, Shiv Sena after a backfire in Social Media.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X