மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிவசேனாவின் மனதை மாற்றுவோம்.. சரத் பவார் அதிரடி பேட்டி.. மகாராஷ்டிராவில் ஆட்டம் காணும் அரசு!

நாங்கள் சிவசேனாவின் மனதை மாற்றுவோம், என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

மும்பை: சிவசேனாவிடம் சிஏஏ, மற்றும் என்பிஆரின் சிக்கல்களை எடுத்துரைப்போம். கண்டிப்பாக நாங்கள் சிவசேனாவின் மனதை மாற்றுவோம், என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

பெரும் எதிர்ப்பை மீறி குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமானது. இதற்கு எதிராக நாடு முழுக்க பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.

முக்கியமாக அரசியல் கட்சிகள் இடையே, கட்சிகளுக்கு உள்ளேயும் கூட இந்த சட்டத்திற்கு எதிராக பலர் குரல் கொடுத்து வருகிறார்கள்.இந்த மசோதா காரணமாக தற்போது ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் பெரிய அளவில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.

 மகாராஷ்டிராவில் என்.பி.ஆர் அனுமதிக்கப்படும்.. என்.ஆர்.சி கிடையாது.. உத்தவ் தாக்ரே அறிவிப்பு மகாராஷ்டிராவில் என்.பி.ஆர் அனுமதிக்கப்படும்.. என்.ஆர்.சி கிடையாது.. உத்தவ் தாக்ரே அறிவிப்பு

என்ன பேட்டி

என்ன பேட்டி

தற்போது சிஏஏ மஹாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சிவசேனா கட்சி சிஏஏவிற்கு தீவிரமாக ஆதரவு அளித்து வருகிறது. சிஏஏ மூலம் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறி வருகிறது. அதேபோல் சிஏஏவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவும் சிவசேனா முயற்சி எடுக்கவில்லை. இந்த நிலையில் இன்று சிவசேனா என்பிஆர் குறித்தும் வெளிப்படையாக கருத்து தெரிவித்தது.

தேசிய மக்கள் தொகை

தேசிய மக்கள் தொகை

அதன்படி மகாராஷ்டிராவில் கண்டிப்பாக தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். மாநில அரசு இதற்கு கண்டிப்பாக ஒத்துழைக்கும் என்று சிவசேனா குறிப்பிட்டு இருக்கிறது.ஆனால் நாங்கள் என்பிஆர், சிஏஏ கொண்டு வருவோம். கண்டிப்பாக என்ஆர்சி கொண்டு வர மாட்டோம் என்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சிவசேனாவின் இந்த முடிவிற்கு தற்போது கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியுள்ளது.

காங்கிரஸ் எப்படி

காங்கிரஸ் எப்படி

காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கி உள்ளது. இதனால் இவர்களின் கூட்டணியில் சிறிய அளவில் பிளவும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சிவசேனாவின் இந்த முடிவை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் எதிர்த்துள்ளனர். அதில், நாங்கள் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் அனைத்தையும் எதிர்க்கிறோம். தொடக்கத்தில் இருந்து எதிர்த்து வருகிறோம்.

என்பிஆர் வராது

என்பிஆர் வராது

இதற்கு எதிராக நாடாளுமன்றத்திலும் வாக்களித்தோம். இதனால் நாங்கள் சிவசேனா உடனும் இது தொடர்பாக பேசுவோம். சிவசேனாவிடம் சிஏஏ, மற்றும் என்பிஆரின் சிக்கல்களை எடுத்துரைப்போம். கண்டிப்பாக நாங்கள் சிவசேனாவின் மனதை மாற்றுவோம், மகாராஷ்டிராவில் என்பிஆர் வராது என்று சரத் பவார் தெரிவித்துள்ளார்.

English summary
We'll Convince Shiv Sena on NPR says Sharad Pawar after govt's support to CAA in Maharashtra.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X