மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சிவசேனாவுடன் இணைந்து ஆட்சியமைக்க மாட்டோம்... அதிகாரத்தின் ஆணவத்தை மக்கள் விரும்பவில்லை.. சரத்பவார்

Google Oneindia Tamil News

Recommended Video

    BJP plan to keep CM post for next 5 years too

    மும்பை: மகாராஷ்டிரா மாநிலத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) தலைவர் சரத் பவார், சிவசேனாவுடனான எந்தவொரு கூட்டணியும் இல்லை என திட்டவட்டமாக நிராகரித்தார். அதிகாரத்தின் ஆணவத்தை மக்கள் விரும்புவதில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்றும் பவார் கூறினார்.

    மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக 102 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான சிவசேனா 61 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. 163 இடங்களில் வென்றதன் மூலம் பாஜக கூட்டணி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது.

    அதேநேரம் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 41 இடங்களிலும், சுயேட்சைகள் மற்றும் இதர கட்சிகள் 14 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

    ஹரியானா முதல்வர் கட்டாரின் அமைச்சரவையில் ஒருவரை தவிர அனைத்து அமைச்சர்களும் படு தோல்வி!ஹரியானா முதல்வர் கட்டாரின் அமைச்சரவையில் ஒருவரை தவிர அனைத்து அமைச்சர்களும் படு தோல்வி!

    சிவசேனா உடன் கூட்டணியா

    சிவசேனா உடன் கூட்டணியா

    இந்த சூழலில் நேற்று தேர்தல் முடிவுகள் முன்னணி விவரம் வெளியாகி கொண்டிருந்த போதே தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் , சிவசேனா உடன் இணைந்து ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக மும்பை வட்டாரங்களில் தகவல்கள் வேகமாக பரவின. பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனா ஒன்றும் தீண்டத்தகாத கட்சி அல்ல என்றும் அரசியலில் கூட்டணி எப்படிவேண்டுமானாலும் வைக்கலாம் என்றும் உத்தவ் தாக்ரேவின் மகன் ஆதித்யாவுக்கு முதல்வர் பதவி அளிக்க தேசியவாத காங்கிரஸ் கூட்டணி தயாராக இருப்பதாகவும் யூகமாக தகவல்கள் பரவியது.

    சரத்பவார் அறிவிப்பு

    சரத்பவார் அறிவிப்பு

    ஆனால் இந்த யூகங்கள் எதுவும் உண்மை இல்லை என்பது தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரின் பேச்சு மூலம் தெரியவந்துள்ளது. மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

    அடுத்த கட்ட நடவடிக்கை

    அடுத்த கட்ட நடவடிக்கை

    அப்போது சரத்பவார் கூறுகையில், "மகாராஷ்டிரா மாநிலத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறேன். நாங்கள் சிவசோனா கட்சியுடன் கூட்டணி வைக்க மாட்டோம். நாங்கள் (தேசியவாத காங்கிரஸ்) காங்கிரஸ் மற்றும் எங்கள் கூட்டணி கட்சிகள் இணைந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம்.

    வருவோம்

    வருவோம்

    இப்போது மக்கள் எங்களை எதிர்க்கட்சியில் அமரச் சொல்லி இருக்கிறார்கள். அதிகாரத்திற்கு வர நாங்கள் மீண்டும் முயற்சிப்போம். அதற்காக எங்கள் அடிப்படை கட்டமைப்பை இன்னும் வலுவாக்க முயற்சிப்போம்.

    மக்கள் விரும்பவில்லை

    மக்கள் விரும்பவில்லை

    அதிகாரத்தின் ஆணவத்தை மக்கள் விரும்புவதில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. அதிகாரம் வரும் போகும், ஆனால் எடுத்த நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். ஆளும் கட்சிகளில் சேர எதிர்க்கட்சி முகாமை விட்டு (எங்களை விட்டு) வெளியேறியவர்கள் யாரும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தேர்தலுக்கு முன்னதாக அவர்கள் செய்தவிஷயத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை" என்றார்.

    English summary
    maharashtra election result : Nationalist Congress Party chief Sharad Pawar said We Won't form govt with Shiv Sena
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X