மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரு கேபிள்.. உங்கள் வாழ்க்கையையே மாற்றும்.. டெக் உலகை வாயை பிளக்க வைத்த அம்பானியின் ஜியோஃபைபர்!

ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ மொத்தமாக மக்களின் வாழ்க்கை முறையையும், அவர்கள் தொலைத்தொடர்பு சாதனங்களை பயன்படுத்தும் முறையையும் மாற்ற போகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    டெக் உலகை வாயை பிளக்க வைத்த அம்பானியின் ஜியோ ஃபைபர்-வீடியோ

    மும்பை: ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ மொத்தமாக மக்களின் வாழ்க்கை முறையையும், அவர்கள் தொலைத்தொடர்பு சாதனங்களை பயன்படுத்தும் முறையையும் மாற்ற போகிறது.

    ஜிகா ஃபைபர் என்று டேக் உலகம் கத்திக் கொண்டு இருந்ததை ஜியோஃபைபர் என்று பெயர் மாற்றி தற்போது ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சேர்மேன் முகேஷ் அம்பானி இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

    நம்முடைய வீட்டிற்கு அதிவேக இணைய இணைப்பு இதன் மூலம் கிடைக்க போகிறது என்றுதான் எல்லோரும் நினைத்துக் கொண்டு இருந்தனர். ஆனால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பிளான் வேறு என்பது அம்பானியின் அறிவிப்பு மூலம் தெரிய வந்துள்ளது.

    என்ன வரும்

    என்ன வரும்

    அதன்படி ஜியோஃபைபர் மூலம் நாடு முழுக்க ஃபைபர் கேபிள்கள் அமைக்கப்படும். இதற்கான பணிகள் பல மாநிலங்களில் ஏற்கனவே நடைபெற்று வருகிறது. ஜியோஃபைபர் இணைப்பை பெறுபவர்களின் வீடுகளுக்கு ஒரு ஜியோஃபைபர் கேபிள் எடுத்து செல்லப்படும்.

    அதோடு ஒரு செட் ஆப் பாக்ஸ் வழங்கப்படும். ஒரு டீவியும் இந்த இணைப்பு பெரும் நபர்களுக்கு வழங்கப்படும். அதாவது இந்த செட் ஆப் பாக்சில் ஜியோஃபைபர் கேபிள் இணைக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்படும் டீவியில் அதை இணைத்து நீங்கள் அதை பயன்படுத்தலாம். இதுதான் இந்த ஜியோஃபைபர் அறிவிப்பின் சுருக்கமான விளக்கம். இனி விரிவாக பார்க்கலாம்.

    விலை என்ன

    விலை என்ன

    ஜியோஃபைபர் பிளான்கள் எல்லாம் மாதம் மற்றும் வருட சந்தாவாக கிடைக்கிறது. மாத பிளான் 700 ரூபாயில் இருந்து 10000 ரூபாய் வரை செல்ல கூடியது. இதை இப்போது வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில் வெளிப்படையாக் அம்பானி கூறவில்லை என்றாலும் உறுதியாக இதுதான் பிளான் ரேட் என்கிறார்கள்.

    என்ன வேகம்

    என்ன வேகம்

    அதேபோல் ஜியோஃபைபர் வேகம் நொடிக்கு 100 எம்பியில் இருந்து 1 ஜிபி வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இவ்வளவு வேகத்தில் பிராட்பேண்ட் இணைப்பு இல்லை. ஜியோஃபைபர் உடன் ஜியோஃபைபர் செட் ஆப் பாக்ஸ் ஒன்று வழங்கப்படும். இதுதான் இந்த அறிவிப்பின் சுவாரசியமான விஷயம்.

    இதெல்லாம் இருக்கும்

    இதெல்லாம் இருக்கும்

    இந்த ஜியோஃபைபர் செட் ஆப் பாக்சில் என்ன இருக்கும் என்று இனி பார்க்கலாம்,

    ஜியோஃபைபர் செட் ஆப் பாக்ஸை பைபர் கேபிளுடன் இணைத்து இணையம் நமக்கு வழங்கப்படும். இதில் வைபை ரூட்டரை இணைத்து நாம் நம்முடைய மொபைல் உள்ளிட்ட சாதனங்களுக்கு இணைய வசதி பெற்றுக்கொள்ள முடியும்.

    ஜியோஃபைபர் செட் ஆப் பாக்ஸ் மூலம் டீவியில் இணைத்து வீடியோ கால் செய்ய முடியும். ஒரே நேரத்தில் நான்கு பேர் கான்பிரன்ஸ் வீடியோ கால் பேச முடியும். அதேபோல் இதை வைத்து இணைய இணைப்பு மூலமும் மொபைலில் போன் பேசலாம்.

    அதேபோல் ஜியோஃபைபர் செட் ஆப் பாக்ஸ் மூலம் கேம் டவுன்லோட் செய்து விளையாட முடியும். அதாவது இந்த ஜியோஃபைபர் செட் ஆப் பாக்ஸ் எக்ஸ் பாக்ஸ் 360போலவும் செயல்படும். அதில் நிறைய விதமான கேம்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஒரே நேரத்தில் பப்ஜியை பலர் டீவியில் விளையாட முடியம்.

    ஜியோஃபைபர் செட் ஆப் பாக்ஸ் உங்கள் கேபிளுக்கு மாற்றாக செயல்படும்.

    அதேபோல் நெட்பிளிக்ஸ், அமேசான் போன்ற ஆன்லைன் தளங்களுடன் இவர்கள் செய்ய உள்ள ஒப்பந்தம் காரணமாக அவர்களின் ஷோக்களை காசு கொடுக்காமல் நீங்கள் ஜியோஃபைபர் செட் ஆப் பாக்சில் பார்க்க முடியும்.

    புதிய படங்கள் தியேட்டரில் வந்த அதே நாளில் நீங்கள் அதை ஜியோஃபைபர் செட் ஆப் பாக்ஸ் மூலம் டீவியில் பார்க்க முடியும். ஆனால் இதற்கு 2020 மே வரை காத்திருக்க வேண்டும். காசு தர வேண்டியது இல்லை. மாத சந்தாவில் இது அடங்கும்.

    வேறு என்ன

    வேறு என்ன

    அதேபோல் இந்த ஜியோஃபைபர் மூலம் நீங்கள் பாடம் படிக்கலாம். ஆன்லைன் ஷாப்பிங் செய்யலாம். ஜியோஃபைபர் செட் ஆப் பாக்ஸை உங்கள் டீவியில் இணைத்து அனைத்து ஸ்மார்ட் சாதனங்கள் செய்யும் விஷயங்களையும் ஒரே இடத்தில் செய்ய முடியும்.

    அதேபோல் எதிர்காலத்தில் உலகம் ஆள போகும் விர்ச்சுவல் ரியாலிட்டி சாதனங்களையும் இதனுடன் ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது. இதன் மூலம் விஆர் கண்ணாடி அணிந்து நீங்கள் வீடியோக்களை பார்க்க முடியும்.

    அட இன்டர்நேஷனல் மேட்டர் மட்டுமல்ல லோக்கல் விஷயங்களும் இதில் உள்ளது. ஆம் ஜியோஃபைபர் செட் ஆப் பாக்ஸ் மூலம் உங்கள் லோக்கல் கேபிள் சேனல்களை பார்க்க முடியும். இது பக்காவாக உள்ளூர் கேபிள் போலவும் செயல்படும் .

    சர்வதேச போன்களை இதன் மூலம் செய்ய முடியும்.

    தொடக்க

    தொடக்க


    இதன் மூலம் இலவசமாக டீவி ஒன்றை ஜியோ நிறுவனம் வழங்கும்.

    அந்த டீவியுடன்தான் ஜியோஃபைபர் செட் ஆப் பாக்ஸ் வழங்கப்படும்.

    ஜியோ பார்எவர் (Jio Forever) பிளானை பெற்றுக்கொண்டால் இதெல்லாம் இலவசமாக வழங்கப்படும். இது வருடாந்திர பிளான் ஆகும்.

    என்ன கம்பெனி டீவி வழங்கப்படும், Jio Forever பிளான் விலை என்ன என்பது குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை.

    செப்டம்பர் 5ம் தேதி இது தொடர்பான முழு விவரம் வெளியாகும்.

    என்ன எல்லாம் நடக்கும்

    என்ன எல்லாம் நடக்கும்

    இதன் மூலம் மொத்தமாக இணையம் உங்கள் வீட்டு டீவிக்கு வரும். அது போக தனி தனியாக வீட்டில் யாரும் மொபைல் ரீசார்ச், கேபிள் பணம், ஃவைபை ரூட்டர் பணம், அமேசான் நெட்பிளிக்ஸ் சந்தா கொடுக்க வேண்டியது கிடையாது. எல்லாம் மொத்தமாக ஒரே இடத்தில் கிடைக்கும். டெக் உலகில் இது புதிய புரட்சியாக இருக்கும்.

    English summary
    What is JioFiber? How it will change your life forever? All you need to know.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X