மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மோடி எதிர்ப்பு மட்டுமே.. இதுவா கூட்டணி.. சரியான நவாப் கிளப்.. எதிர்க்கட்சிகள் மீது ஜேட்லி பாய்ச்சல்

Google Oneindia Tamil News

Recommended Video

    கொல்கத்தாவில் கூடும் எதிர்க்கட்சிகளின் மாபெரும் கூட்டம்- வீடியோ

    மும்பை: நரேந்திர மோடி என்ற ஒரு தனி நபருக்கு எதிராக ஒலிக்கும் 'எதிர்மறையான தன்மை கொண்ட நவாப்களின் கிளப்' தான் மாபெரும் கூட்டணி என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி விமர்சனம் செய்துள்ளார்.

    அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் அவர், பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு வீடியோ அழைப்பு மூலம் பேசியதாவது.

    தற்கொலைக்கு மாற்றாக அரசியல் ரீதியாக ஒரு பிற்போக்கான கூட்டணி அமைந்துள்ளது என்றும் எதிர்க்கட்சிகளின் நம்பகத்தன்மையை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றும் கடுமையாக பேசினார்.

    வெவ்வேறு கொள்கைகள்

    வெவ்வேறு கொள்கைகள்

    சமீபத்தில் நடந்த (மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான்) மூன்று மாநில சட்டசபை தேர்தலில், கூட்டணி அமைத்து பாஜகவை வீழ்த்தி விட்டதாக எதிர்க்கட்சிகள் நினைத்துக் கொண்டுள்ளது. ஆனால், அவர்களுக்குள் கொள்கை ரீதியில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன. (மாஹகத் பந்தன்) மாபெரும் கூட்டணி மூலம் யாரை தலைமையாக ஏற்றுக் கொள்வார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.

    தோல்வியடைந்த உக்தி

    தோல்வியடைந்த உக்தி

    மாபெரும் கூட்டணி என்பது ஏற்கெனவே ஆய்வு செய்து பார்க்கப்பட்ட தோல்வியடைந்த உக்தி என்றும் அருண் ஜேட்லி கூறினார். பலம், செயல்திறன் கொண்ட பாஜக தலைமைக்கு எதிராக எதிர்க்கட்சியால் முன்வைக்கப்பட்டுள்ள புள்ளி கணிதம் போன்றது. அரசியலில், கணித முறை கை கொடுக்காது என்றும் கெமிஸ்டிரி பலன் அளிக்கும் என்றும் தெரிவித்தார்.

    அரசியல் விவாதம்

    அரசியல் விவாதம்

    தேர்தல்களுக்கு முன்னதாக அரசியல் விவாதத்தை முன்னெடுக்க வேண்டிய அவசியம் எதிர்க்கட்சிகளுக்கு உள்ளது என்றும் பாஜகவால் உணர்ச்சிவசமான கொள்கைகளை கையில் எடுத்து கொண்டு அரசியல் விவாதங்களை முன்னெடுத்து, கோஷமிட முடியாது என்றும் அருண் ஜேட்லி கூறினார்.

    பொருளாதார பின்னடைவு ஏற்படும்

    பொருளாதார பின்னடைவு ஏற்படும்

    விவசாய கடன்கள் தள்ளுபடியை தவிர வேறு ஏதாவது காங்கிரஸ் கட்சியால் தேர்தல் வாக்குறுதி அளிக்க முடிகிறதா? ஒரே கோஷத்தை வைத்துக் கொண்டு காங்கிரஸ் நாடகமாடுகிறது. கடன் தள்ளுபடி போன்ற நடவடிக்கைகளால் பொருளாதாரத்தில் பெரும் பின்னடைவு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்றும் அருண் ஜேட்லி கூறினார்.

    English summary
    Finance Minister Arun Jaitley has criticized Nawabs Of Negativity its opposition to one man (Narendra Modi)
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X