மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராணுவ ரகசியத்தையெல்லாம் சர்வ சாதாரணமாக விவாதித்த அர்னாப்.. அதிர வைக்கும் மோசடி.. பயங்கர ஆதாரம்!

Google Oneindia Tamil News

மும்பை: டி.ஆர்.பி. மோசடி வழக்கில் பார்க் (BARC) மாஜி சி.இ.ஓ. பார்த்தோ தாஸ் குப்தாவுடன் ரிபப்ளிக் டிவி உரிமையாளர் அர்னாப் கோஸ்வாமி வாட்ஸ் அப் மூலம் சாட்டிங் செய்த 500 பக்க உரையாடலை மும்பை போலீசார் வெளியிட்டுள்ளனர். டி.ஆர்.பி. ரேட்டிங் விவகாரத்தில் மட்டுமல்ல நாட்டின் பல்வேறு முக்கிய விவகாரங்களில் இடைத்தரகரைப் போல அர்னாப் கோஸ்வாமி செயல்பட்டதும் இந்த வாட்ஸ் அப் உரையாடல்களில் அம்பலமாகி உள்ளது.

Recommended Video

    TRP மோசடி முதல் புல்வாமா தாக்குதல் வரை.. வெளியான Arnab Goswami-ன் Whats App chat

    டைம்ஸ் நவ் டிவி சேனல் காலத்தில் இருந்தே அர்னாப் கோஸ்வாமி தீவிர வலதுசாரியாக சர்ச்சைகளில் சிக்கியவர். ஒருகட்டத்தில் ரிபப்ளிக் டிவி என சொந்தமாகவே டிவி சேனல் நடத்தினார்.

    அர்னாப்பின் டிஆர்பி மோசடி

    அர்னாப்பின் டிஆர்பி மோசடி

    அர்னாப் கோஸ்வாமி, தமது டிவி சேனலின் ரேட்டிங்கை முறைகேடாக அதிகரித்தது மகாராஷ்டிரா போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதுநாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கில் ரிபப்ளிக் டிவி சிஇஓ விகாஸ் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.

    வாட்ஸ் அப் உரையாடல்

    இந்த நிலையில் டிவி சேனல்கள் ரேட்டிங் தொடர்பான நிறுவனமான பார்க் அமைப்பின் முன்னாள் சி.இ.ஓ. பார்த்தோ தாஸ் குப்தாவும் அர்னாப் கோஸ்வாமியும் வாட்ஸ் அப்பில் உரையாடியதன் தொகுப்புகள் வெளியாகி உள்ளன. மும்பை போலீசார் தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் இந்த உரையாடல்கள் ஆதாரங்களாக இணைக்கப்பட்டுள்ளன. 500 பக்கங்களை கொண்ட இந்த உரையாடல் தொகுப்பை மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதில் நாட்டையே அதிரவைக்கும் பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

    புல்வாமா தாக்குதல்

    புல்வாமா தாக்குதல்

    ஒரு டிவி சேனலின் செய்தி ஆசிரியர் அல்லது உரிமையாளரான அர்னாப் கோஸ்வாமி, மத்திய அரசின் பல முக்கிய முடிவுகளில் இடைத்தரகர் போல செயல்பட்டிருப்பதும் அம்பலமாகி உள்ளது. ஜம்மு காஷ்மீரில் 370வது பிரிவு நீக்கப்படுவது முன்கூட்டியே அர்னாப் கோஸ்வாமிக்கு தெரிந்திருக்கிறது. அதேபோல் புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட பல சம்பவங்கள் தொடர்பாகவும் பார்த்தோ தாஸ் குப்தாவுடன் வாட்ஸ் அப்பில் அர்னாப் கோஸ்வாமி உரையாடியது தெரியவந்துள்ளது.

    அதிகார தரகராக.. பிரசாந்த் பூஷண்

    அதிகார தரகராக.. பிரசாந்த் பூஷண்

    மத்திய பாஜக அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் அர்னாப் கோஸ்வாமிக்கு முன்கூட்டியே தெரிந்திருப்பதையும் இந்த உரையாடல்கள் வெளிப்படுத்தி இருக்கின்றன. இதனை சுட்டிக்காட்டியுள்ள பிரசாந்த் பூஷண், ஊடகத்தை பயன்படுத்தி அதிகார தரகராக அர்னாப் கோஸ்வாமி செயல்பட்டிருப்பதையே இந்த உரையாடல்கள் அம்பலப்படுத்துகின்றன; இந்த நாட்டில் சட்டம் என ஒன்று இருந்தால் அர்னாப் கோஸ்வாமி நீண்டகாலம் சிறையில் தள்ளப்பட வேண்டியவர் என கொந்தளித்திருக்கிறார்.

    English summary
    WhatsApp conversations between Republic TV editor Arnab Goswami and Former CEO of BARC Partho Dasgupta went viral in social media.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X